• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-30 18:54:40    
ஷாங்சியில் மதச் சுற்றுலா

cri

ஷாங்சி மாநிலம், சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ளது. சீனப் பௌத்த மதப் பண்பாட்டு மற்றும் தாவ் மதப் பண்பாட்டு வளர்ச்சியின் முக்கிய தளங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது. சீனப் பௌத்த மத மரபுச் செல்வங்கள் நிறைந்த இடங்களில் இதுவும் ஒன்று.

பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, மேற்கு நோக்கி, புகை வண்டியில் 5 மணி நேரம் பயணமான பின், ஷாங்சி மாநிலத்தின் 2வது பெரிய நகரான தாதொங் சென்றடையலாம். 1500க்கும் அதிகமான ஆண்டு வரலாறுடைய யுன்காங் கற்குகை இருப்பதால், தாதொங் நகரம் சீனாவில் புகழ் பெற்றது.

தாதொங் புறநகரின் மேற்கு பகுதியிலுள்ள வூசோ மலையில் அமைந்துள்ள யுன்காங் கற்குகை, மலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகும். கிழக்கிலிருந்து மேற்கு வரை அதன் நீளம், ஆயிரம் மீட்டர். கி.பி. 460ஆம் ஆண்டு இக்கற்குறை செதுக்கப்பட்டது என்று சீன வரலாற்றுத் தகவல் தெரிவிக்கிறது.

தற்போது, இங்கு 53 கற்குகைகள் உள்ளன. இங்குள்ள புத்தரின் உருவச்சிலைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இவற்றில் மிகப் பெரிய புத்தர் சிலையின் உயரம் 17 மீட்டர் ஆகும். மிகச் சிறியது, சில சென்டிமீட்டர் மட்டுமே. சீனாவின் மிகப் பெரிய கற்குகைகளில் ஒன்றாகத் திகழும் இவ்விடம், உலகப் புகழ்பெற்ற கலைக்கருவூலமாகவும் திகழ்கிறது.

யுன்காங் கற்குகை, அதன் நுட்பமான செதுக்கு வேலைப்பாட்டினால் உலகப் புகழ்பெற்றது. அதன் செதுக்கு வேலைப்பாட்டில் இந்திய பௌத்த மதக் கலையையும் சீனப் பாரம்பரியக் கலையையும் நன்கு இணைந்துள்ளன.