• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-03 10:38:08    
தாவூல் இன மகளிர் சூ மைய்

cri

கடந்த காலத்தில், தாவூல் தேசிய இனத்தின் ஒவ்வொரு மகளிரும் காகித கத்தரிப்புக் கலையில் ஈடுபட்டார்கள். சிறிய வயதில், விளையாட்டுப் பொரும்மைகள் இல்லாததால்பெண்கள், காகித கத்தரிப்பில் நன்றாக ஈடுபட்டார்கள். ஆனால், நடு நிலைப்பள்ளியில் கல்வி முடித்த பின், உணவு விடுதியில் பணிப் பெண்ணாகச் சேர்ந்தார். வேலை நேரம் முடிந்ததும் கத்தரிப்பில் ஈடுப்பட்டார். சில முக்கிய கலைஞர்களிடம் கற்றுக் கொண்டார். எனவே, அவருடைய தரம் உயர்ந்து 5 ஆண்டுகளுக்கு அதிகமாக உணவு விடுதியில் வேலை சென்த பின், தமது காகித கத்தரிப்பு தொழில் நுட்பத்தால், மாவட்டத்தின் பண்பாட்டு மாளிக்கையில் சேர்ந்து காகித கத்தரிப்பு மற்றும், ஓவியத்தில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். இங்கு அவருடைய ஆர்வத்திற்கு ஏற்ற பணியாக இருப்பதால் அவரது, இயல்பான திறமை முழுமையாக வெளிப்படுகிறது. இதன் விளைவாக, பல சிறந்த கலைப் படைப்புக்கள் இருவாயின. ஆனால், கலை என்பது, ஒட்டுமொத்தமானது. பாடல், ஓவியம் முதலிய தலைசிறந்த கலைகளுடன் இணைந்து, தமது கலையறிவை செழுமைப்படுத்த வேண்டும். சூ மைய், பல்வேறு இடங்களுக்குச் சென்று, பார்வையிட்டு, தமது நிலையை உயர்த்தினார். கிராமத்துக்குச் சென்று, , நமது தாவூல் சிறுப்பான்மைதேசிய இன வாழ்க்கை பற்றி அறிகிறேன். பொருட்காட்சியகத்துக்கு அடிக்கடி சென்று, மற்ற இனங்களின் பல்வேறு கலைகளின் மேம்பாட்டை புரிந்து கொண்டு பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களுடன் தொடர்பு கொண்டு கற்றுக் கொண்டு, அறிவை விரிவாக்கி, கலைத்திறனை வளர்க்கிறேன். கலை, வாழ்க்கையிலிருந்து வருகிறது. கலை வாழ்க்கையை வெளிக்காட்டுகிறது , கலை, வாழ்க்கையை காட்டிலும் உயர்ந்தது என்னும் கோட்பாட்டில் சூ மைய் ஊன்றி நின்றார்.

அவர், தாவூல் சிறுப்பான்மை தேசிய இனத்தின் சாதாரணப் பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த போதிலும், தமது இனத்தின் கலைக்காக இடைவிடாமல் பாடுபட்டு வருகிறார். தமது பணியையும், சாதனையையும் பற்றி பேசுகையில், அவர், முதலில் தமது இனம், தலைவர்கள், தமது குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார் அவர் கூறியதாவது முதலில் நமது இனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த இனத்திலிருந்து தான் எனக்கு தேவையான அறிவை நான் பெற்றேன். இரண்டாவது, தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் எப்போதுமே எனக்கு பெரும் ஆதரவும் அளிக்கிறார்கள். இறுதியாக, எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்களால், எனக்கு புதுமையான ஆற்றல் கிடைத்தது தமது கலைப் படைப்பு, சந்தையில் விற்பனையாகி பொருளாதார பயனளிக்கும் என்று செய்தியாளர் அவருக்கு யோசனை கூறினார். ஆனால், அவருக்கு வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. சந்தையில் எந்த பொருட்களும் விற்பனையாகின்றன. அனைத்தையும் சந்தையில் விற்பனை செய்ய முடியாது. மக்களின் கனவை நிறைவேற்றும் விருப்பம் இருக்க வேண்டும். பொருளாதார பயன் பற்றி கருத்தில் கொள்ள வேண்டாம். முதலில், நான் மன நிறைவு அடைய வேண்டும்.

தேசிய இனத்துக்காக முயற்சி மேற்கொண்டு பங்கு ஆற்றினேன். நான் இதில் ஊன்றி நின்று வருகிறேன் என்றார். தற்போது அவர் மேலும் பலதிறன்களைக் கற்றறிந்து காகித கத்தரிப்புக் கலை மூலம், தாவூல் இனத்தை அறிமுகப்படுத்தலாம். தவிரவும், தமது கலைப் பொருட்களை பெய்சிங்கிற்கும் உலகத்துக்கும் எடுத்துச் சென்று, பொருட்காட்சி நடத்தி, சீன மக்களுக்கு உலக மக்கள் தாவூல் இன மக்களை பற்றி விளக்கலாம் என்று அவர் விரும்பினார்.