• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-03 22:04:33    
சீன மேசை பந்து

cri

உலக அளவில் டேபிள் டென்னிஸ், மேசைப் பந்து விளையாட்டில் சீனா முதலிடம் வகித்து வருகிறது. 1996. 2000 ஆண்டுகளின் ஒலிம்பிக் போட்டிகளீன் மேசைப் பந்து விளையாட்டின் அனைத்து தங்க பதக்கங்களையும் சீனா வென்றுள்ளது.

2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் மொத்தமுள்ள 4 தங்கங்களில் ஒன்றை மட்டுமே சீனா நழுவவிட்டது. கடந்த ஆண்டு ஷாங்காயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மொத்தமுள்ள 5 தங்கங்களையும் சீனா வென்றது.

அண்மையில் ஜெர்மனியின் ப்ரெமனில் நடைபெற்ற குழு மேசை பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆண்கள் பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றது. இந்நிலையில் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளான எதிர்வரும் தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளிலில் அனைத்து தங்க பதக்கங்களும் சீனாவுக்குத்தான் என்ற எதிர்பார்ப்பு ஏறக்குறைய நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் மேசை பந்து விளையாட்டில் சீனாவின் மேன்மை உலகறிந்தது என்றாலும் தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளில் மொத்தமுள்ள 7 தங்கங்களையும் சீனா வெல்வது கடினமான ஒன்றே என்கிறார் பலமுறை உலக சாம்பியனாகவும், ஒலிம்பிக் வெற்றி வீரராகவும் சாதனை படைத்த சீனாவின் முன்னாள் மேசை பந்து நட்சத்திரம் டெங் யாபிங்.

4 ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவின் பூசனைல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது சீனா 3 தங்கங்களை மட்டுமே வென்றது. ஆண்கள் மர்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் தென் கொரியாவிடமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஹாங் காங்கிடமும் தங்கத்தை நழுவவிட்டது சீனா. இந்நிலையில் தற்போது தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங் காங் ஆகியவை பெருமளவு முன்னேற்றமடைந்துள்ளதால், தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனா மேசை பந்தின் அனைத்து பிரிவிலும் தங்கங்களை வெல்வது மிகக் கடினமான பணியாகும் என்கிறார் டெங் யாபிங்.

மேலும் தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளைக் காட்டிலும் 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் மீதே அதிக கவனம், மற்ற எந்த போட்டிகளுக்குமில்லாத முக்கியத்துவம் பெய்சிங் ஒலிம்பிக்கிற்கு தரப்படும் என்கிறார் அவர்.

அதேவேளை தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீன அணியின் இளம் வீரர்களுக்கு அனுபம் பெறவும், மொதத்தில் சீன அணிக்கு தங்களது திறமைகளை பட்டைத் தீட்டிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் என்கிறார் 18 முறை உலக சாமியனாகவும், 4 முறை ஒலிம்பிக் சாம்பியனாகவும் இந்த விளையாட்டில் கொடி கட்டி பறந்த டெங் யாபிங்.