• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-04 17:20:04    
உலக சுற்றுலா வளர்ச்சியில் சீனாவின் பங்கு

cri

10வது சீன Huang Shan சர்வதேச சுற்றுலா விழாவும், An Hui பண்பாட்டு விழாவும் இன்று An Hui மாநிலத்தின் Huang Shanவில் துவங்கின. உலக சுற்றுலா அமைப்பின் தலைமைச் செயலர் Frangialliயின் சிறப்புத் தூதர் துவக்க விழாவில் கலந்து கொண்டு, Frangialliயின் உரையை வாசித்தார். சீனா, சுற்றுலாத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறி, உலக சுற்றுலா வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது என்று இந்த உரை கூறுகின்றது.
சீனா, உலக சுற்றுலா அமைப்பில் சிறப்பான இடம் வகிக்கின்றது என்றும், சுற்றுலா பயணிகள் விரும்பும் ஆசிய நாடு சீனா என்றும், உலகில் மிகவும் வரவேற்கப்படும் சுற்றுலா நாடுகளில் 4வது இடம் வகிக்கின்றது என்றும், கடந்த சில ஆண்டுகளாக, உலக சுற்றுலா அமைப்பு, சீன அரசுடனும் சீனாவின் பல்வேறு இடங்களின் அரசுகளுடனும் நட்பார்ந்த உறவை உருவாக்கி, சீனச் சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சிக்கு முன்பு போலவே ஆதரவு அளித்து வருகிறது என்றும் உரை கூறுகின்றது.
உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின் படி, 2020ஆம் ஆண்டு, உலக அளவில் சுற்றுலா இலக்காக அதிக பயணிகள் விரும்பும் நாடுகளில் சீனா, முதலிடம் வகிக்கும்.