வட மேற்கு சீனாவின் சிங்ஹ மாநிலத்தில் யாங் சு ஆறு, மஞ்சள் ஆறு, லேங் சாங் கியாங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளின் தோற்வாய் பிரதேசத்தின் உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு மண்டலம், சீனாவில் மிகவும் வறிய பிரதேசங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தின் வளர்ச்சியில் உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இம்மாநிலத்தின் துணை தலைவர் லீ சிங் சென் தெரிவித்துள்ளார். இம்மூன்று ஆறுகளின் தோற்வாய் பிரதேசத்தின் உயிரின வாழ்க்கைச்சூழலின் மதிப்பு, அனைத்தையும் விட மேலானது. இப்பிரதேசத்தின் முக்கிய கடமை, உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பையும் நிதி வருவாயையும் உருவாக்குவதல்ல. வளர்ச்சியும் நிர்மாணமும், உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்புக்கு கீழ்பணிய வேண்டும். அரசின் ஆதரவுடன், இம்மண்டலத்தின் வளர்ச்சியில், உயிரின வாழ்க்கைச்சூழலின் நலனை பலியாக்கி, பொருளியல் நலனை நாடும் வளர்ச்சி மாதிரி மேற்கொள்ளப்படாது என்று அவர் சொன்னார். மூன்று ஆறுகளின் தோற்வாய் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் சிங்ஹ மாநிலத்தின் 20 சோக்களும் மாவட்டங்களும் அடங்கும். அவற்றின் மக்கள் தொகை, சுமார் 7 லட்சம். கால் நடை வளர்ப்பு, உள்ளூரின் முக்கிய தொழிலாகும். நவீன தொழிற்துறை கிட்டத்தட்ட ஒன்றுமில்லை.
|