• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jul 3th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-06 17:46:58    
காஷ் நகரிலுள்ள முஸ்லீம்களின் வாழ்க்கை

cri

காஷ் நகரம், சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திற்கு தென் மேற்கில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 90 விழுக்காட்டு மக்கள் உய்கூர் இனத்தவர்கள். ஏனைய பத்து விழுக்காட்டினர் ஹான் இனத்தையும் இதர சிறுபான்மை தேசிய இனங்களையும் சேர்ந்தவர்கள். மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 98 விழுக்காடு வகிக்கின்றனர். கி.பி பத்தாவது நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் காஷ் பிரதேசத்தில் பரவிய பின்னர், அது சிங்கியாங்கின் தெற்கு பகுதியிலுள்ள இஸ்லாமிய பண்பாட்டு மையமாக விளங்கி வருகின்றது. தற்போது காஷ் பிரதேசத்தில் சுமார் பத்தாயிரம் பெரிய மற்றும் சிறிய மசூதிகள் உள்ளன. 11 ஆயிரத்து 300க்கும் அதிகமான மதகுருமார்கள் உள்ளனர். இது ஒரு உண்மையிலேயே ஒரு மசூதி நகரமாகும்.

காஷ் இஸ்லாமிய திருகுர்ரான் பள்ளிக்கூடம் சீன மத்திய அரசின் 50 லட்சம் யுவான் முதலீட்டுடன் 1991ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இஸ்லாமிய மதகுருமார்களுக்கு இதில் பயிற்சி தரப்படுகிறது. இந்தப் பள்ளிக்கூடம் காஷ் பிரதேசத்திலுள்ள இடைநிலை பள்ளிகூட படிப்பு முடித்தவர்களைச் சேர்த்து மதக் கல்வி வழங்குகிறது. படிப்பு காலம் மூன்று ஆண்டுகள். மாணவர்கள் படிப்பை முடித்த பின், பெரும்பாலோர் மதகுருமார் பற்றாக்குறையாக இருக்கும் ஒதுக்குப்புறப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தற்போது இந்தப் பள்ளிக்கூடத்தில் 150 மாணவர்கள் பயில்கிறார்கள். ஆண்டுதோறும் 50 புதிய மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர், 50 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். ஆசிரியர்களில் 40 விழுக்காட்டினர் சிங்கியாங் இஸ்லாமிய கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். 30 விழுக்காட்டினர் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே பயிற்சி பெற்றவர்கள். 70 விழுக்காட்டு பாடங்கள் மதப் பாடங்கள். 30 விழுக்காட்டு பாடங்கள் கல்வித் துறையைச் சேர்ந்தவை.

உய்கூர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் அபுலைதி உகுலி என்பவர் இந்த பள்ளிக்கூடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர், அவர் கூறியதாவது

எனது அண்ணன் சிங்கியாங் வேளாண் இயல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அக்கா சிங்கியாங் மருத்துவ கல்லூரியில் படித்தவர். காஷ் வட்டாரத்தின் சில ஒதுக்குப்புற பகுதியில் மதகுருக்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒரு தலைசிறந்த இமாமாக வளர கல்விகற்பதற்கு தாம் இந்த திருகுர்ரான் பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்ததாக அவர் எங்களிடம் சொன்னார்.

வாழ்நாளில் ஒரு முறையாவது புனித நகரான மெக்காவுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமின் முதல் விருப்பமாகும், காஷ் நகரின் சமூக பொருளாதார வளர்ச்சியினால், மக்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் இருந்து மேலும் கூடுதலான முஸ்லீம்கள் மெக்காவுக்குச் சென்று வழிபாடு செய்துவருகின்றனர். தற்போது, காஷ் வட்டார முஸ்லிம்கள் இரண்டு வழிகளில் மெக்காவுக்கு செல்கின்றனர். ஒன்று தனியாக செல்வது, இரண்டு, உள்ளூர் இஸ்லாமிய சங்கம் ஏற்பாடு செய்து, ஒரு குழுவாக சௌதி அரேபியாவுக்குச் செல்வது. 2004ஆம் ஆண்டில் காஷ் வட்டாரத்தைச் சேர்ந்த 1500க்கும் அதிகமானோர் மெக்காவுக்கு தனியாக அல்லது குழுவாக சென்று வழிபாடு செய்தனர். அவர்களில் பெரும்பாலோர் முதிய முஸ்லீம்கள். 65வயதான அக்மு மமுதி அவர்களில் ஒருவராவார். தமது சௌதி அரேபியப் பயணம் பற்றி அவர் கூறியதாவது

புறப்படுவதற்கு முன், அனைத்து உற்றார் உறவினர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் என் வீட்டுக்கு அழைத்தேன். என்னை வழியனுப்ப வந்த அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டோம் என்று அவர் கூறினார்.

மெக்காவிலிருந்து திரும்பிய பிறகு, அவர் உற்றார் உறவினர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒன்று கூட்டி, கோலாகலமாக கொண்டாடினார். மெக்காவிலிருந்து அவர் சௌதி அரேபியாவின் பேரிச்சம் பழத்தையும் மெக்காவின் புனித நீரையும் கொண்டுவந்து அவர்களுக்கு கொடுத்தார். அதன்பின், அவர் தெருவில் செல்லும் போதெல்லாம் ஹாஜி என்று அவரை அழைக்கிறார்கள். இதனால், அவர் மிகவம் மனநிறைவு அடைகிறார். இயல்புதானே!

உள்ளூர் முஸ்லீம்கள் மெக்காவுக்குச் சென்று வழிபாடு செய்வதற்குத் துணைபுரியும் வகையில், காஷ் அரசும் இஸ்லாமிய சங்கமும் ஏராளமான பணிகளை மேற்கொண்டன. ஒவ்வொரும் வழிப்பாட்டுக் குழுவுடனும், மொழிபெயர்ப்பாளரும், மருத்துவரும் சென்று, வழியில் பயணக்குழுவினரைக் கவனித்துக் கொள்கின்றனர். இதற்காக, அரசு ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒரு லட்சம் யுவான் செலவழிக்கிறது.

63வயதான ஹாஜி அப்துல் ரஹ்மான் காஷ் நகரின் துலைதிபாக் வட்டத்திலுள்ள மசூதியின் தலைமை இமாம். அவருடைய வீட்டின் முற்றம் 600 சதுர மீட்டர் பரப்புடையது, மூன்று பகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. முழு முற்றமும் ஒரு பெரிய தாவரப் பூங்கா போல் உள்ளது. அவரின் வீட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். அப்துல் ரஹ்மான் விருந்தினரிடம் கூறியதாவது

முதலில் அப்துல் ரஹ்மான் இந்த வட்டத்தின் மசூதியின் இமாம் ஆவார். அரசு விதிகளின் படி, திங்கள் தோறும் வாழ் செலவாக, அவருக்கு குறிப்பிட்ட தொகை தரப்படுகிறது. தவிரவும், அவர் காஷ் நகரின் திருகுர்ரான் பள்ளிகூடத்தின் ஆசிரியர், அவருடைய திங்கள் ஊதியம் நானூறு அல்லது ஐந்நூறு யுவானாகும். ஆனால், அப்துல் ரஹ்மான் நடத்தும் ஒரு ஹோட்டல் ஆண்டுக்கு 30 ஆயிரம் அல்லது 40 ஆயிரம் யுவான் வருமானம் தருகிறது. இதுதான் அவருடைய முக்கிய வருமானம். குறைவான செலவு, தரமான சேவை ஆகியவற்றின் காரணமாக இந்த ஹோட்டலின் வியாபாரம் எப்பொழுதும் சீராக இயங்கிவருகின்றது. தவிரவும், அவருடைய மகன் வியாப்பாரத்தைக் கவனிப்பதாலும் மகள்கள் வெளியூரில் வேலை செய்வதாலும் குடும்பத்துக்குமேலும் அதிக வருமானம் கிடைக்கின்றது.

உண்மையாகவே, இமாம் என்ற முறையில் அப்துல் ரஹ்மான் பள்ளிக்கூடத்திலும் மசூதிகளிலும் இஸ்மாமிய மத சிந்தனையைப் பரப்பும் அதே வேளையில் கருணை, நல்லொழுக்கம் என்ற எழுச்சியையும் அவர் தமது வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார். கட்சி மற்றும் அரசின் சிறந்த மதக் கொள்கையினால், இஸ்லாமிய மத சிந்தனை காஷ் வட்டாரத்திலும் நாடுமுழுவதிலும் பரவி வருகின்றது. நாடு இல்லாமல் முஸ்லீம்களான எங்களின் இன்றைய இன்ப வாழ்க்கை இல்லை. எனவே, மதத்தையும் நாட்டையும் நேசிப்பதே, முஸ்லீம்களின் மிக உன்னதக் கடமை என்று காஷ் வட்டார இஸ்லாமிய சங்கத்தின் துணைத் தலைவரும் சீனாவின் மிக பெரிய மசூதியான காஷ் ஐதிகால் மசூதியின் தலைமை இமாமான ஆ ச்சி கூறினார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040