• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-06 17:41:35    
2008 பெய்சிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள்

cri

2008ம் ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் நீச்சல் போட்டிகளது இறுதிச் சுற்று பெய்சிங் நேரப்படி காலையில் நடைபெறும் என்ற செய்தி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது நாம் அறிவோம். நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் இறுதிச் சுற்றுகள் காலையில் நடைபெறுவதாக அமைந்த 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் நிகழ்ச்சி நிரலை கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழுவினர் முழுதாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் ஹெய்ன் வெர்ப்ரூகன் இதை அறிவித்தபோது முழுமையான ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகாக 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் நிகழ்ச்சி நிரலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழுவினர் ஏற்றுக்கொண்டதாக கூறியதோடு, நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளின் இறுதிச் சுற்று காலையில் நடைபெறும், மற்ற தடகள விளையாட்டுகள் வழமை போல மாலையிலேயே நடைபெறும் என்று உறுதிபடுத்தினார்.

காலை வேளையில் நீச்சல் போட்டியின் இறுது சுற்று நடத்தப்படுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் என். பி. சி. தொலைக்காட்சியினரின் அழுத்தத்தின் பேரில், அமெரிக்க மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒலிபர்ப்பில் இந்த நீச்சல் போட்டிகளின் இறுதிச் சுற்றை கண்டுகளிக்க வேண்டும் என்பதால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் இந்த முடிவை எடுக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஹெய்ன் வெர்ப்ரூகன் சில ஊடகங்களின் கோரிக்கையின்படியாக இந்த முடிவு செய்யப்பட்டது என்பதை தாம் மறுப்பதாகவும், இது வழமையான செயல்முறையின் படி, ஆலோசனை விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் ஒப்புதல் பெறப்பட்டது என்றும் உதரணமாக 1998 சியோல் ஒலிம்பிக்கின் போதும் பல விளையாட்டு போட்டிகள் காலை வேளையில் நடத்தப்பன என்றும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கர்கள் பலருக்கு நீச்சல் போட்டிகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் மீது ஆர்வம் அதிகம். அதிலும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் கடந்த 2004 ஒலிம்பிக்கில் 6 தங்க பதக்கங்களை வென்றிருக்க இம்முறை ஒலிம்பிக்கிலும் அவரது சாதனைகளை காண அமெரிக்க மக்களுக்கு ஆர்வம் அதிகம். இந்த பின்னணியில் அமெரிக்காவின் என்.பி.சி தொலைக்காட்சி பேரளவு நிதியளிப்பை தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமைக்காக செலுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது. காலை வேளையில் நடத்தப்படுவதால் நீச்சல் வீரார்கள் மற்றும் வீராங்கனைகளின் உடலளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்ந்து அறிந்த பின்னரே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் இந்த முடிவுக்கு இணங்கியதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.