• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-06 17:57:53    
சியோல் நகருக்குச் சென்றுள்ள பெய்சிங் பல்கலைக்கழக மாணவர்கள்

cri

தென் கொரியாவின் தென் கொரிய-சீன இளைஞர்கள் எதிர்கால காடு என்ற அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று, பெய்சிங்கின் பல்வேறு உயர் கல்வி நிலையங்களை சேர்ந்த சீன மற்றும் தென் கொரிய பல்கலைக்கழகங்களின் தொண்டர் பரிமாற்ற முகாமின் உறுப்பினர்கள் இன்று பெய்சிங்கை விட்டு, தென் கொரியாவின் தலைநகர் சியோல் உள்ளிட்ட இடங்களுக்கு பயணமாக சென்றுள்ளனர்.
இவ்வமைப்பு சீனாவுக்கான முன்னாள் தென் கொரிய தூதரகத்தால் நிறுவப்பட்டது. பாலைமயமாக்கத்தைத் தடுத்து கட்டுப்படுத்துவது, வட கிழக்காசியாவின் பசுமைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியத்தை முன்னேற்றுவிப்பது, தென் கொரிய-சீன இளைஞர்களுக்கிடை பரிமாற்றத்தை வலுப்படுத்துவது ஆகியவை, அதன் முக்கிய நோக்கங்களாகும்.
2002ம் ஆண்டுக்குப் பின், 5 முறை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். உள்மங்கோலிய பாலைவனத்திலும், பெய்சிங்கின் புறநகரிலும் "சீன-தென் கொரிய இளைஞர்கள்" நட்புறவு காடு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நடவடிக்கை, 6வது முறையாக நடைபெறுகின்றது. தென் கொரியாவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், மரம் நடுதல், தொண்டர்களின் அனுபவப் பரிமாற்றம், பாலைவன மயமாக்கத்தை தடுப்பது பற்றிய கருத்தரங்கு ஆகியவற்றில் பங்கெடுக்கின்றனர்.