• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-07 18:35:12    
பேச்சோடு பேச்சாக

cri
தொலைந்த ஆடு

'இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே' என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடல் உண்டு. மேலும், பலிகொடுப்பதற்காகவே ஆட்டை வளர்ப்பார்கள். பொதுவாக, வேண்டுதலை நிறைவேற்ற கிடா வெட்டி, பொங்கலிட்டு, படையல் செய்து விருந்துண்டு களிப்பார்கள். அதே வேளையில், பெரிய மனிதர்கள் தங்களது சின்னத்தவறுகளை மூடி மறைக்க குட்டித்தலைவர்களை பலிக்கடா ஆக்கிவிடுவார்கள். இப்படிப்பட்ட பலிக்கடாக்களை சீனாவில் 'த்தி சுயாங்' (Ti Zhu Yang) என்கிறார்கள். சீன மொழியில் 'யாங்' என்றால் ஆட்டைக் குறிக்கும். சிலர் முட்டாள்தனமான வேலைகளைச் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் புலியின் வாயில் போய் தானாகவே சிக்கும் ஆட்டைப் போன்றவர்களாம். Yang Luo Hu Kou இப்படி முட்டாள்தளமான வேலை செய்து சிக்கலில் மாட்டும் மூடர்களின் அழிவு எப்படிப்பட்டது தெரியுமா? Yang Ru Lang Qun-ஓநாய்க் கூட்டம் கடித்துக்குதறும் ஆட்டைப் போன்று சின்னாபின்னமாகி விடுவார்கள்.

சீனர்கள் ஆட்டை விலைமதிப்பற்ற பொக்கிஷமாகக் கருதுகிறார்கள். மூன்று ஆடுகள் சேர்ந்து விட்டால் அந்த வீட்டில் செல்வம் கொழிக்கும் என்றொரு பழமொழி. San Yang Kai Tai அதுவா? இதுவா? எது? என்றொரு முடிவு எடுத்தாக வேண்டிய காலகட்டத்தில் சரியான முடிவு எடுக்காவிட்டால், மானம், மரியாதை, சேர்த்துவைத்த செல்வம் எல்லாமே தொலைந்து போகும். எப்படி? Qi Hu Wang Yang-கூட்டுச் சாலையில் வழிதவறிக் காணாமல் போகும் ஆடுகளைப் போல. ஒரு தடவை தொலைத்த பிறகு, அடுத்த தடவையாவது படிப்பினை பெற வேண்டாமா? விழிப்புடன் இருக்க வேண்டாமா? வாங் யாங் பு லாவ் (Wang Yang Bu Lao-ஆட்டைத் தொலைப்பானேன், தேடித்தேடித்திரிவானேன்!)

பன்றி

பன்றி மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய மிருகம். கொழுத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அதனால் வேகமாக ஓட முடியாது. அதனால் தான் சீனாவில் மந்த புத்திக்காரனை அல்லது ஞாபக மறதி உள்ள வனை Zhu Nao Zi என்று திட்டுகிறாரகள்-அதாவது பன்றி மூளை உள்ளவன் என்று பழிக்கிறார்கள். இதைத் தான் நமது நகைச்சுவை நடிகர்கள் 'பன்னிப்பயலே' என்று வசை மொழியாகப் பயன்படுத்துகின்றனர். பலமாகக் குறட்டை விட்டுத் தூங்கினால் நாம் என்ன சொல்வோம்? பாவம், எவ்வளவு அலுப்போ! மரக்கட்டை போல தூங்குகிறான் பாரு! என்போம், சீனாவிலோ Shui De Gen Si Zhu Si De செத்த பன்றி போலத் தூங்குகிறானாம். உரத்த குரலில் கத்திக்கத்திப் பேசுகிறவர்களை 'இந்தா சும்மா கம்னு கிட, வெட்டப்படும் பன்னியைப் போலக்கத்தாதே' என்கிறார்கள் சீனாவில் Gen Sha Zhu De Shi De-

பொதுவாகவே, பன்றியைப் பற்றி சீனர்கள் நல்லபடியாகப் பேசுவதில்லை. ஆனாலும் பன்றிக்கறியை-Zhu Ro விரும்பி உண்கிறார்கள். அது மட்டுமல்ல, பன்றியை அதிர்ஷ்டக்கார மிருகமாகவும் கருதுகிறார்கள்-Fei Zhu Gong Men-வீட்டுவாசல் வழியே ஒரு கொழுத்த பன்றி உள்ளே நுழையுமானால் அந்த வீட்டில் செல்வம் கொழிக்குமாம். சரி, இனியாவது பன்றியைக் கண்டால் சீ! போ! என்று அருவருப்புடன் ஒதுங்க மாட்டீர்கள். அப்படித்தானே!