
மங்கோலிய இன மக்கள் வசிக்கும் மங்கோலிய பாணி கூடாரமும், வெள்ளை நிறத்தின் மீதான பற்றாக பிரதிபலிக்கின்றது. பொதுவாக, இத்தகைய கூடாரம், வெள்ளை நிற கம்பளித்துணியால் கட்டப்படுகின்றது. புல்வெளியில் மேய்க்கும் வெள்ளை நிற ஆட்டுக் கூட்டத்துடன், வெள்ளை நிறத்தை நேசிக்கும் மங்கோலிய இன மக்களின் பாரம்பரியத்தைக் காட்டுகின்றது. மங்கோலிய இனத்தின் வரலாற்றில் புகழ் பெற்ற அரசியல்வாதியும் ராணுவவாதியுமான Jenghiz Khan என்பலர் காலமான பின் தலைமுறையினருக்கு விட்டுச்சென்ற "எட்டு வெள்ளை நிற அறைகள்" என்பது, அதாவது, வெள்ளை நிறத்தால் மூடிய எட்டு கூடாரங்கள், மங்கோலிய இன மக்கள் மதிப்பு காட்டும் புனித பொருட்களாகின.
13வது நூற்றாண்டின் துவக்கத்தில் Jenghiz Khan காலமான பின் அவரது தலைமுறையினர், போர் கொடிகள், குதிரை சவாரி உட்பட, அவர் பயன்படுத்திய பொருட்களை, எட்டு வெள்ளை நிற கம்பளித்துணி கூடாரங்களில் அஞ்சலிக்காக வைத்துக்கொண்டனர். அத்துடன், அஞ்சலி சாசனம், அஞ்சலிக்கான மரியாதை ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன. ஓராண்டில், நான்கு காலாண்டுகளிலும் மாபெரும் அஞ்சலி நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதற்குப் பின், பல்வேறு இடங்களில் சிதறி வாழும் மங்கோலிய இன மக்கள் இந்த "எட்டு வெள்ளை நிற கூடாரங்களில் அஞ்சலி செலுத்துவதை" வழக்கமாகக் கொண்டுள்ளனர். அன்றி, தமது முன்னோடிகளை நினைவுகூர்ந்து, வரலாற்றை மறு ஆய்வு செய்யும் முக்கிய வடிவமாகவும் கொள்கின்றனர்.
|