• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-07 18:37:57    
டிஜிட்டல் தொலைக்காட்சி ஆராய்ச்சி

cri

சீன அரசின் டிஜிட்டல் தொலைக்காட்சியின் பரவல் திட்டத்தின் படி சீனா 2015ம் ஆண்டுக்குள் அனலாக் தொலை காட்சியின் ஒலிபரப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டு நாடு முழுவதும் ஒலிபரப்பு மற்றும் தொலைக் காட்சியில் டிஜிட்டல் முறைக்கு மாறிவிடும். சீன அரசு ஒளி ஒலி மற்றும் திரைப்பட ஆணையகத்தின் அறிவியல் தொழில் நுட்ப பகுதியின் துணை இயக்குனர் வுவாங் லியென் கூறியதாவது

"எங்கங் நாட்டை கிழ்ககு பகுதி, மத்திய பகுதி மேர்கு பகுதி ஆகிய மூன்று பகுதிகளாக நாங்கள் பிரிக்கின்றோம். பின் 4 கட்டங்களாக தொலை காட்சி டிஜிட்டல் மயமாக்கத் திட்டத்தை செயல்படுத்துவோம். 2015ம் ஆண்டுக்குள் அனலாக் தொலைக் காட்சியிலிருந்து டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு முற்றிலுமாக மாறிவிட வரும் பாடுபடுகிறோம்"என்றார்.

இப்போது சீனாவில் 40 லட்சத்துக்கு அதிகமான மக்கள் டிஜிட்டல் தொலைக்காட்சியைக் கண்டு களிக்க முடியும். அவர்கள் சாதாரண தொலைக் காட்சி பெட்டிகள் மூலம் தி.வி.தி போன்ற தெளிவான நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க முடியும். தவிரவும் திரையரங்கில் ஒலிப்பது போன்ற துல்லியமான ஒலியைக் கேட்கலாம். இதற்கிடையில் தொலை காட்சி சேவை, கல்வி, உடனடி போக்குவரத்து செய்திகள் உள்ளிட்ட பெருவாரியான தகவல்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஹாங்சோ நகர டிஜிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பானர் தாங் யூ அம்மையார் கூறியதாவது.

"நாங்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் வாழ்க்கை சேவை, கல்வி கர்பது, நிதி துறை, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் முதிலோருக்கான சேவை, குடியிருப்பு பிரதேசத்துக்கான சேவை ஆகிய 6 சேவைகளை ஏற்படுத்தியுள்ளோம். எங்கள் தகவல் மேடையை நாள்தோறும் சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் பயன்படுத்துகின்றனர்"என்றார்.

இந்தச் சேவைகள் மூலம் பணி புரிவோருக்கு டிஜிட்டல் தொலைக்காட்சி பெரும் வசதி வழங்கியுள்ளது. ஹாங் சோ நகரவாசி ச்சென் ஹொ தம்பதிக்கு சிறுவயது மகன் இருக்கிறான். அவர்களுடைய வேலையும் பரபரப்பானது. டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் அரிசி மற்றும் உணவு எண்ணெய் வாங்குவது போன்ற வீட்டு வேலைகள் சுலபமாகும் என்று ச்சென் ஹொங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

எடுத்துக்காட்டாக நான் தென் சீனாவில் விளையும் அரிசியை வாங்க வேண்டும். இதற்கு எனக்கு வேண்டிய அளவைத் தேர்ந்தெடுத்து வாங்கும் பட்டனை அமுக்கினால் என்னுடைய ஆடர் வேலை முடிந்து விடும் என்றார்.