ராஜா......கேட்பது எளிதாக உள்ளது. ஆனால் தமிழர்களுக்கு காய்கள் மீது விருப்பம் அதிகம்.
கலை......அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. பசுமையான காய்கள் இருந்தால் போதும். சரி நாம் நூடல்ஸ் தயாரிப்பு முறை பற்றி சொல்லட்டுமா?
ராஜா.......சொல்லுங்கள்.
கலை.......முதலில் காய்கள் அனைத்தையும் நன்றாக கவுவி சுத்தம் செய்ய வேண்டும். கொதி நீரில் காய்களைப் போட்டு அவற்றின் நிறம் கரும் பச்சையாக மாறியதும் வெளியே தட்டில் எடுத்து வைக்க வேண்டும்,.
ராஜா........இறால் மற்றும் முட்டையை சேர்க்க வேண்டுமானால் எப்படி செய்வது?
கலை..........இவையனைத்தையும் காய்களை வேகவைப்பது போல் கொதிநீரில் போட்டு 2 நிமிடம் வேகவிடுங்கள்.
ராஜா......எனக்கு புரிந்தது. முதலில் இறால் மற்றும் முட்டையை முதலில் கொதிநீரில் போட வேண்டும். 2 நிமிடத்திற்கு பின் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். அப்புறம் காய்களை வென்னீரில் போட வேண்டும். நிறம் கருப்பாக மாறிய பின் வெளியே எடுக்க வேண்டும்.
கலை.......ராஜா பரவாயில்லை. நன்றாக கற்றுக் கொண்டீர்கள்.
ராஜா.......தேவையான காய்கறிகளை வேகவைத்த பின் என்ன செய்ய வேண்டும்?
கலை......பிறகு இன்னொரு வாணலியில் வென்னீரை ஊற்றுங்கள். கொதித்த பின் ரெடிமேட் நுடல்ஸை போடுங்கள். அது வெந்ததும் பாத்திரத்தில் போடுங்கள் அப்புறம் இறால், முட்டை, பல்வகை காய்கள் ஆகியவற்றை நூடல்ஸ்ஸில் சேருங்கள். கொஞ்சம் உப்பு, சோயா சோஸ் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
ராஜா.......கேட்பது அவ்வளவு சிக்கலானதல்ல. சத்து எப்படி?
கலை.......இதில் ஐயமே இல்லை. நீங்கள் பாருங்கள். முட்டை, இறால் ஆகியவை உடம்புக்கு கொழுப்பு சத்து தருவது பல்வகை காய்களும் சத்தானவை. எந்த முனையில் பார்த்தாலும் சத்து அதிகம்.
ராஜா........உண்மைதான். சமைப்பது எளிதானது. வேலை செய்யும் தம்பதிகளுக்கு குறிப்பாக வசதியானது.
கலை........ஆமாம். சமைத்து ருசி பாருங்கள்.
ராஜா........நண்பர்களே இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது. அன்றாட வாழ்க்கையில் பயிற்சி செய்து ருசி பாருங்கள். ஒரு வரி எழுதுங்கள்.
|