வட மேற்கு சீனாவின் சிங்ஹ மாநிலத்தில் இயற்கைச்சூழல் திட்டப்பணி நடைமுறைக்கு வந்தது முதல், மேய்ச்சல் நிலத்தில் புல் வளர்ப்பது, கால் நடை மேய்ச்சல் தடுப்பு முதலிய வடிவங்கள் மூலம், இத்திட்டப்பணிக்குட்பட்ட வட்டாரத்தில் 35 விழுக்காட்டு கால்நடைகள் குறைக்கப்பட்டன. 28 லட்சம் ஹெக்டர் நிலத்தில் மேய்ச்சல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மிக முக்கியமான ஆறுகளான யாங் சி ஆறு, மஞ்சள் ஆறு, சர்வதேச ஆறான லேங் சங் கியாங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளின் கூட்டுத் தோற்றுவாயான சன் கியாங் யு மண்டலத்தில் இத்திட்டப்பணி நடைபெறுகின்றது. கடந்த 30 ஆண்டுகளில், உலகில் வறட்சி-வெப்பம் தழுவிய கால நிலை மற்றும் மனிதகுலத்தின் நியாயமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில், இம்மண்டலத்தில் இயற்கைச்சூழல் நாளுக்கு நாள் நோசமாகியுள்ளது. இம்மண்டலத்தின் இயற்கைச்சூழலை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும், 2003ம் ஆண்டு முதல், மேய்ச்சல் நிலத்தில் புல் வளர்ப்பது, குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைச் சீனா மேற்கொள்ளத் துவங்கியது.
|