சீன இந்திய நட்புறவுக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்?
முன்னுரை..
நட்பு என்பது இருதரப்பிலும் கையாள வேண்டிய விஷயம் ஆகும். 'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'என்றார் வள்ளுவர் பெருந்தகை
நட்புக்கு இலக்கணமாய் இந்த திருக்குறளை நினைவு கொள்ளலாம். இந்திய சீன நட்புறவுக்கு அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. நம்மால் முடிந்த சில செயல்களை செய்வோம். அதைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.
இந்திய அரசும் சீன அரசும்:
இரு நாடுகளும் அரசுத் துறையில் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உள்ளன. தற்சமயத்தில் இந்தியாவின் அமைச்சர்கள் சீனப் பயணம் மேற்கொண்டது, சீனத் தலைவர்கள் இந்தியா வருவது ஆகியவற்றோடு பல சீனப் பொருள்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவைகளுக்கு காரணம் என்ன? இரு நாட்டுத் தலைவர்களின் வருகையால் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டதன் விளைவுதான் இந்த மாற்றங்கள். இதைப்போன்று இன்னும் பல திட்டங்கள் வளர வேண்டும். இந்திய சீன நட்புறவுக்கு நமது சீன வானொலி ஆற்றும் பணி பற்றி இங்கு காண்போம். சீன வானொலி இல்லாவிட்டால் சீனாவைப் பற்றி நான் அறிந்து இருக்க முடியாது. நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற பல ஆயிரத்திற்கு மேற்பட்ட நேயர்கள் சீன வானொலி மூலம் சீனாவைப் பற்றியும், சீனப் பண்பாடு, கலை, வேளாண்மை, இயற்கைக் காட்சித் தலங்கள் மற்றும் சீனாவின் பாரம்பரிய சிறப்புகளை அறிந்துள்ளோம். இதற்கு மேலாக இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் சீன நண்பர்களை
பெற்றுள்ளோம். அவர்கள் யார் என்கிறீர்களா? அவர்கள்தான் சீன வானொலி தமிழ்ப்பிரிவு அறிவிப்பாளர்கள், பணியாளர்கள்.
இப்படிப்படிட்ட வாய்ப்பு வானொலி கேட்கும் நேயர்களுக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
நாம் சீன வானொலிக்கு செய்ய வேண்டியது என்ன? நாம் தவறாமல் வானொலி கேட்பது மூலமாக சீனாவில் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். இதற்கு நாம் கைமாறாக நம்மால் செய்ய முடிந்தது கடிதங்கள் எழுதுவது. அந்த கடிதங்களை தொடர்ந்து எழுத வேண்டும். சீனாவில் உள்ள கல்லூரிகளில் பலதரப்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இந்தியாவில் இருந்து பல்கலைக்கழகத்தினுடைய நிர்வாகிகள் சீனா செல்கிறார்கள். அங்குள்ள கல்வித் தரத்தையும் இந்தியாவில் உள்ள கல்வி தரத்தையும் ஒப்பிடுகிறார்கள். இதே போன்று தொழில்துறையிலும் பலர்
சீனாவிற்கு சென்று அங்கு தொழில் நடத்துவதைப் பற்றி வானொலி 'நட்புப்பாலம்' மூலமாக அறிந்து கொண்டோம். சீன வானொலி தொடர்பு இல்லாவிட்டால் இப்படிப்பட்ட தகவல்களை அறிய முடியாது.
நாம் செய்ய வேண்டியது என்ன?
சீன வானொலியைப் பற்றிப் பலருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்திய சீன நட்புறவு வளரும். அதற்காகத்தான் சீன வானொலி ஆண்டுதோறும் பொது அறிவுப் போட்டிகளை நடத்துகிறது. அதில் தரப்படும் வினாத்தாட்களை பிறருக்கு வழங்கி சீன வானெலியை அறிமுகம் செய்யலாம்.
ஆண்டுதோறும் தலைமை சீன வானொலி மன்றம் கருத்தரங்கு நடத்தி வருகிறது. ஊரில் உள்ள பல பெரிய மனிதர்களை கருத்தரங்குகளுக்கு அழைத்து வந்து அதன் மூலமாக வானொலியை அறிமுகம் செய்யலாம். இதைப் போன்ற காரியங்கள் நம்மால் செய்ய முடியும் என்பது உண்மை. சிறுசிறு துளிகள் சேர்த்தால் வெள்ளம் ஆகும்.
அதைப்போல சிறிய சிறிய நேயர்களின் கூட்டமைப்பு நட்புறவை வளர்க்கும். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்ற நேயர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகளை வானொலி வழங்குகின்றது. இதற்கு மேலாக நீண்டநாள் நேயர்களையும் திறமையாகச் செயல்படுகின்ற நேயர்களையும் சீனாவிற்கு அழைத்து சுற்றுப் பயணம் செய்ய வைக்கிறார்கள்.
நேயர்கள் பலர் புத்தகங்கள் மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும், சீன வானொலியைப் பற்றி அறிமுகம் செய்கிறார்கள். குறிப்பாக ஈரோடு மாவட்டம் நாச்சிமுத்து அவர்களுடைய சீனப் பயண அனுபவம் குமுதம் பத்திரிகையில் வெளி வந்தது. என்னுடைய சீனப் பயண அனுபவம் தினமணி பத்திரிகையில் வெளிவந்தது. இதைப் பார்த்து முன்பின் அறிமுகம் இல்லாத பலர் என்னை அறிமுகம் கண்டுகொண்டார்கள். அவர்களைப் பற்றியும் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நட்புகளை சீன வானொலி பெற்று தந்து உள்ளது என்பதை எண்ணி மனம் மகிழ்கிறேன்.
வானொலியைப் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது நமது கடமை ஆகும். இந்திய சீன நட்புறவிற்கு நம்மால் முடிந்த செயல் இதுவே. வானொலியைப் பற்றியும் வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் பலருக்கு அறிமுகம் செய்தன. மூலமாக இந்திய சீன நட்புறவு மேலும் வளர்ச்சி அடையும். இந்திய சீன நட்புறவு ஆண்டில் நாம் ஒவ்வொருவரும் பலரை சீன வானொலிக்கு அறிமுகம் செய்வோம் என்று உறுதி கொள்ள வேண்டும். இன்னும் வரும் காலங்களில் இந்திய நாட்டில் உள்ளவர்கள் சீனாவிற்கு செல்வதும் சீனாவில் உள்ள சீனர்கள்
இந்தியாவிற்கு வருகை புரிவதும் வெகுவிரைவில் வளர வாய்ப்புகள் உள்ளன. தற்பொழுதும் இந்த வாய்ப்புககள் உள்ளன. இந்த வாய்ப்புகள் இன்னும் வளரும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நேரடி விமான சேவைகள் இனிவரும் காலத்தில் அதிகம் உருவாகும்.
முடிவுரை...
இந்திய சீன நட்புறவிற்கு நமது சீன வானொலி நட்புப் பாலமாக விளங்குகிறது. இந்த நட்புப் பாலம் மூலமாக சீனாவைப் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. இந்த வாய்ப்பினை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது நமது நடமை ஆகும். அந்தக் கடமையை நாம் ஒவ்வொருவரும்
தவறாமல் செய்ய வேண்டும் என்பது என் ஆவல். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒருசில நேயர்கள் சிறப்பாக செய்கிறார்கள். இந்தப் பணியை ஒவ்வொரு நேயரும் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆவல். இந்திய சீன நட்புறவுக்கு நாம் செய்யக் கூடிய செயல் ஒரு துளியாக இருக்கட்டும். ஒவ்வொரு துளியும் ஓடையாக மாறி பின்னர் ஆறாகி கடல் என்னும் நட்புறவில் கலக்கும் என்பதில் ஐயமில்லை. ஓங்குக இந்திய சீன நட்புறவு.
|