திருச்சி அபினிமங்கலம் க. அருண் எழுதியுள்ளார். ஜூன் 13ம் நாள் ஒலிபரப்பான செய்தி அறிக்கையில், சீனாவில் மணலமயமாவதை தடுக்க சீன அரசு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதை அறிந்தேன். மரங்கள் நடுவதில் சீனா காட்டும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். மரம் இருந்தால் தான் மழை வரும். ஆகவே காடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் மணல்மயமாவதை தடுக்கவும் சீனா மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருவதுஎதிர்காலத்தில் நல்ல பயனை அளிக்கும் என நம்புகிறேன் என்று எழுதியுள்ளார். வாணி: அடுத்து ஈரோடு எஸ். கே. பாப்பம்பாளையம் நேயர் பி.டி.சுரேஷ்குமார் எழுதிய ஜூன் திங்கள் 28ம் நாள் ஒலிபரப்பான ஏக போகத் தடுப்புச் சட்டம் பற்றிய செய்தித் தொகுப்பு குறித்த கடிதம்.கலைமகள் வழங்கிய ஏக போக தடுப்புச் சட்டம் பற்றிய செய்தித் தொகுப்பின் மூலம் ஏகபோக தடுப்பு சட்டம் பற்றியும், ஏக போக தடுப்பு கமிட்டி பற்றியும், இச்சட்டத்தின் மூலம் சீனாவில் உள்ள சாதாரண மக்களும் பயனடைய முடியும் என்பது பற்றியும் அறிந்துகொண்டேன். ஏகபோக தடுப்புச் சட்டம் சீனாவில் நுகர்வோரின் நலனுக்காக நுகர்வோரின் காவலனாக அமிந்துள்ளது என்பதையும் அறிந்தேன் என்று எழுதியுள்ளார். க்ளீட்டஸ்: அடுத்து சேந்தமங்கலம் ஏ. திருவேங்கடம் எழுதிய ஜூலை 6ம் நாள் ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். சீன பாரம்பரிய மருத்துவம், இசை மூலம் குணமளித்தல் உள்ளிட்ட உளவியல் தொடர்பான தகவல்களை கேட்டோம். இசையின் மூலம் மனிதனுக்கு கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை சரி செய்ய முடியும் என்பதை அறிந்தோம். இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை என்பதை கேட்டதுண்டு ஆனால் இசையால் உடல் உறுப்புகளை குணப்படுத்தலாம், உடல் நலம் பெறலாம் என்று நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்துகொண்டேன். இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது என் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார். வாணி: அடுத்து பாண்டிச்சேரி பெரியகாலாப்பட்டு பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். ஜூலை 17ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை கேட்டேன். உலகளாவிய சுகாதாரம், பாதுகாப்பு மற்ரும் தொற்று நோய், கல்வி ஆகியவை பற்றி எட்டு நாடுகள் குழு பேச்சு வார்த்தை நடத்தியதை பற்றிய மிக விரிவான செய்தித் தொகுப்பை வழங்கிய தமிழ் செல்வம் அவர்களுக்கு நன்றி. மேலும் சீனக் கதை நிகழ்ச்சியில் ராஜாராம் அவர்கள் வழங்கிய நான்கு குட்டிக் கதைகள் மிக மிக சிறப்பாக இருந்ததுடன் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. சீன பண்பாடு நிகழ்ச்சியில் சீன எழுத்துக்களீன் தோற்றம் பற்றி இது வரை அறிந்திராத பல அரிய தகவல்களை ராஜாராம் அவர்கள் வழங்கினார். நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
|