சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்ட பின், திபெத்தின் வளர்ச்சி பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று சீன ரயில் துறை அலுவலகத்திலிருந்து எமது செய்தியாளர் கூறியுள்ளார். தற்போது, நாள்தோறும் அதிகப்படியான பயணிகள் ரயில் வண்டியில் திபெத்துக்குள் நுழைந்து பயணம் மேற்கொள்கின்றனர். திபெத்தில் சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சியை இது பெரிதும் மேம்படுத்தி, உணவுத் துறை, தொலைத்தொடர்பு, செலாவணி, போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் வளத்தையும் தூண்டியுள்ளது. திபெத்தின் அன்னிய வர்த்தகத்தின் போக்குவரத்துச் செலவு பெரிதும் குறைந்துள்ளது. பூர்வாங்க மதிப்பீட்டின் படி, சிங்காய்-திபெத் ரயில் பாதை இயங்க துவங்கிய பின், ஆண்டுதோறும் திபெத்துக்குள் நுழையும் பொருட்கள் மற்றும் திபெத்திலிருந்து ஏற்றிச்செல்லப்படும் பொருட்களின் போக்குவரத்துச் செலவு சுமார் 20 கோடி யுவான் குறையும் எனப்படுகிறது. திபெத் பொருளாதார வளர்ச்சியின் மொத்தச் செலவு பெரிதும் குறையும். திபெத்தின் அடிப்படை வசதி கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த சூழலை இது வழங்கியுள்ளது.
|