சீனச் சுங்கத் துறையின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை, ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இறக்குமதித் தொகையும், ஏற்றுமதித் தொகையும் இதே காலத்தில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகரித்துள்ளன. முன்னதாக, சீன வணிக அமைச்சரின் உதவியாளர் Fu Zi Ying பேசுகையில், இவ்வாண்டு முழுவதிலும் சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
|