• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-10 14:03:50    
உலக வாலிபால் சாம்பியன்சிப் போட்டிகள்

cri
ஜப்பானில் கடந்த அக்டோபர் 31ம் நாள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச வாலிபால் கூட்டமைப்பின் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது இரண்டாவது சுற்றில் நுழைந்துள்ளன. ஆசியா, அமெரிக்க, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பிரிவுகளாக செயல்படும் சர்வதேச வாலிபால் கூட்டமைப்பின் வட்டார ரீதியிலான பிரிவுகளின் படி 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களும், கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற நாடும், இப்போட்டிகள் நடைபெறும் நாடும் என 24 அணிகள் 4 குழுக்களாக பிரிந்து முதற் சுற்றில் மோதின. தலா 6 அணிகள் கொண்ட ஒவ்வொரு குழுவிலிருந்தும், அதிக புள்ளிகள் பெற்ற முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் என்ற அடிப்படையில், தற்போது இரண்டாவது சுற்றில் மொத்தம் 16 அணிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஜப்பான், சீனா, தைவான், கொரியா, அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, கியூபா, பிரேசில் இத்தாலி, ஜெர்மனி, செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, அசர்பெட்ஜான், ரஷ்யா, நெதர்லாந்து, துருக்கி, போலந்து ஆகிய அணிகள் தற்போது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடிக்கொண்டுள்ளன.

இந்த 16 அணிகளில் இரு குழுவிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் 6 இடங்களை பெரும் அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்காக தெரிவாகும். மொத்தத்தில் இரு குழுக்களில் உள்ள 12 அணிகளின் இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி போட்டியில் மோதும். அவற்றின் வெற்றியாளர்கள் இறுதி போட்டிக்கும், தோல்வி கண்ட அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கும் போட்டியிடும். எஞ்சிய மற்ற 8 குழுக்கள் 5 முதல் 12வது வரையான இடங்களுக்கென போட்டியிடும்.