• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-10 15:20:51    
முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை சுருக்கம்

cri

இப்போது மேற்கு சீனாவின் முத்து என்னும் பொது அறிவு போட்டிக்கான நான்காவது கட்டுரையில் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை என்பது பற்றி கூறுகின்றோம். சீனாவிலுள்ள மூன்று கோடி முஸ்லிம் மக்களில் ஒரு கோடி முஸ்லிம்கள் சிங்கியாங் உயி கூர் தன்னாட்சி பிரதேசத்தில் வாழ்கின்றனர். பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடு போன்ற பல்வகை காரணங்களினால் வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் சிங்கியாங்கிலுள்ள முஸ்லிம் பெண்கள் சமூக வாழ்க்கையில் ஒட்டாமல் ஒதுங்கியே வாழ்ந்தனர். நவசீனா நிறுவப்பட்ட பின், முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை மாறியது. அவர்கள் வளர்ச்சி பெற்று சமூகத்தில் உயர்ந்த தகுவிலையை அடையும் வகையில் மத்திய அரசும் சிங்கியாங்கின் பல்வேறு நிலை அரசு அமைப்புக்களும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், மக்களின் கண்ணோட்டத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதலான பெண் முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சமூகத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றப் போக்கிலும் பங்கெடுத்துள்ளனர். 34 வயதான திரிநூர் உய்கூர் இனத்தின் அழகி. அவர் இரண்டு குழழ்தைகள் பெற்ற தாய். அவர் நடத்தும் ஹோட்டல் சிங்கியாங்கின் காஷ் வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்றது.

சேமான் என்பது அதன் பெயர். ஹோட்டலில் போடப்பட்ட சாமாங்கள் 100 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை. இது மட்டுமல்ல அதனுடைய தரமான சேவையினால் நட்சத்திர ஹோட்டல் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. பல நாடுகளின் தலைவர்களும் அன்னிய விருந்தினர்களும் காஷிக்கு வரும் போதெல்லாம் இந்த ஹோட்டலில் தங்குகின்றனர். இந்த ஹோட்டல் பற்றி திரிநூர் கூறுகிறார். இப்போது நமது சேமான் சுற்றுலா கூட்டு நிறுவனத்தில் 10 நிறுவனங்கள் உள்ளன. ஹோட்டல், குடியிருப்ப துறை, சுற்றுலா துறை, கட்டுமான நிறுவனம் மற்றும் வெலிநாட்டு வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் நிர்வாத்திற்கு பொறுப்பேற்கின்றேன். காஷ் புற நகரில் சுமார் 290 ஹெக்டர் நிலப்பரப்பில் மாசுபடாத உணவு தயாரிப்பு தளம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. வணிகத் துறையில் ஈடுபடும் அனுபவம் பற்றி அவர் கூறியதாவது .பெண்கள் உண்மையில் மிகவும் கெட்டிக்காரர்கள்.

அலுவலகப் பணியில் அவர்கள் திறமை மிக்கவர்கள். ஆனால் பெண்களுக்குத் திறமை இல்லை என்று பாரம்பரிய பார்வையில் கூறப்படுகின்றது. தங்களுடைய திறமையை வெளிகாட்ட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். இது மட்டுமல்ல சொந்த ஆற்றலுடன் ஏழை மக்களுக்கும் இன்னலுக்குள்ளாக்கப்பட்டவருக்கும் உதவி வழங்க விரும்புகின்றேன். வீட்டில் சும்மா உட்கார்ந்து எதுவும் செய்ய முடியாது. இப்போது என்னுடைய ஆர்வத்தை நிறைவேற்றினேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். மேலும் கூடுதலான இன்னல்களை சுமந்தாலும் ஆர்வத்துடன் விரும்பிய துறையில் ஈடுபடுகின்றேன் என்றார் திரிநுர்.