கலை......வணக்கம் நண்பர்களே. இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம்.
ராஜா......கலை போன முறை இந்திய கிச்சன் நிர்வாகி சதீஷ் இந்திய முறையில் சீனக் கஞ்சி சமைப்பது பற்றி விளக்கினார். உங்களுக்கு நினைவிருக்கிறதா?
கலை......ஆமாம். அரிசிக் கஞ்சி சமைப்பது எளிதான வேலை. ஒப்புக் கொள்கிறீர்களா?
ராஜா......ஒப்பு கொண்டுள்ளேன். உங்கள் பேச்சை கேட்டால் வேறு ஏதோ கஞ்சி சமைப்பது பற்றி சொல்லப் போவது போல் தெரிகின்றது. அப்படிதானே.
கலை......நீங்கள் சொன்னது சரி நீங்கள் பாருங்கள். எங்கள் நாட்டின் மிக மூத்த சீன சுதேசி மருத்துவர் குவா தோ பற்றி நீங்கள் சீனப் பண்பாட்டு நிகழ்ச்சி கதை நிகழ்ச்சியும் உருவாக்கும் போது சொன்னீர்கள். நினைவிருக்கா?
ராஜா.....ஞாபகத்தில் உண்டு. கஞ்சி சமைப்பது பற்றிய அனுபவம் அவருக்கும் உண்டா?
கலை.....கண்டிப்பாக. கஞ்சி சாதாரண மக்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்றது. அன்றாட வாழ்க்கையில் பல்வகை கஞ்சிகளைக் குடித்தால் உடம்புக்கு நல்லது.
ராஜா......சரி இன்றைக்கு எந்த மாதிரி கஞ்சி சமைக்க போறோம்?
கலை......இன்றைக்கா? காளான் கலந்த கோழிக்கறிக் கஞ்சி சமைப்பேன்.
ராஜா......கலை உங்களுக்கு காளான் மிகவும் பிடிக்கிறதா?
கலை......ஆமாம். தின்தோறும் காளான் சாபிட்டால் உடம்புக்கு நல்லது. ஆயுளை நீட்டிக்கவும் உதவுகின்றது.
சரி இன்றைக்கு சமைப்பதற்கு தேவையான என்னென்ன பொருட்கள் தேவை. சொல்லட்டுமா?
ராஜா.....சொல்லுங்கள்.
கலை...... 150 கிராம் அரிசி, கோழியின் மார்பு பகுதி கறி100 கிராம், 50 கிரான் காளான், இஞ்சி கொஞ்சம், பூண்டு 2 துண்டு, உப்பு தேவைப்படும் அளவு.
ராஜா.....கோழிக்கறிக் கஞ்சி சமைப்பதற்கு இவ்வளவு பொருட்கள் போதுமா?
கலை.......போதும்.
ராஜா..... நான் மீண்டும் சொல்லட்டுமா?
கலை......சொல்லுங்கள்.
ராஜா...... 150 கிராம் அரிசி, கோழியின் மார்பு பகுதிக் கறி100 கிராம், 50 கிராம் காளான், இஞ்சி கொஞ்சம், பூண்டு 2 பீஸ் துண்டுகள், உப்பு தேவைப்படும் அளவு.
|