• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-14 14:02:41    
பிரசவித்த பெண் மரண விகிதம் குறைவு

cri
கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களின் மரண விகிதம் என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு வட்டாரத்தின் சமூக வளர்ச்சி மற்றும் நாகரிக பண்பை அளப்பதற்கான முக்கிய குறியிட்டு எண்ணாகும். சீனா விசாலமான நிலப்பரப்புடையது. அதனால் அதன் வளர்ச்சி எல்லா இடங்களிலும் சமமான நிலையில் இல்லை. சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளின் சில பிந்தங்கிய பிரதேசங்களில் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களின் மரண விகிதம் அதிகமாக உள்ளது. இதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் ஒன்றை கடந்த ஈராயிரமாவது ஆண்டில் சீன அரசு செயல்படுத்த துவங்கியது. அந்த முயற்சி இன்று பயன் அளித்துள்ளது. அண்மையில் எமது செய்தியாளர் ஒருவர் அங்குச் சென்று நிலைமையை நேரில் கண்டு வந்தார்.

ச்சுச்சுவான் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வறிய முச்சுவான் மாவட்டத்தில் மலைகள் நிறைந்து காணப்படுகின்றன. மாவட்டத் தலைநகரில் இருந்து பாழடைந்த நெடுஞ்சாலை மூலம் எங்கள் செய்தியாளர் 40 நிமிடங்கள் பேருந்தில் பயணமாகி மலையடிவாரத்தை அடைந்தார். பின் அவர் சேறுசகதி நிறைந்த மலை வழியில் நடந்து அங்கு வசித்த கிராமவாசி லீ யூன் ச்சென் அம்மையாரைப் பேட்டி கண்டார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

 

40 வயதுடைய லீ 1990ம் ஆண்டு முதல் 4 முறை கருவுற்றார். அவருடைய குடும்பத்தின் வறுமை காரணமாக ஒவ்வொரு முறையும் வீட்டில் தான் பிரசவிக்க வேண்டி ஏற்பட்டது. 4 குழந்தைகளில் மூவர் பிரசவித்த போதே செத்துப் போனார்கள். தாயாரும் மரண விளிம்பில் தத்தளித்துப் போனார். 2000ம் ஆண்டில் அவர் 5வது முறையாக கருவுற்றார். கிராமத்திலுல்ள மருத்துவர் அவருக்கு மருத்துவ சோதணை செய்த பின் கருப்பையில் சிக்கல் இருப்பதால் மருத்துவ மனையில் பிரசவிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினார். இதனால் லீ அம்மையார் வேதனைப்பட்டார்.

 

"மருத்துவ மனையில் பிரசவித்து தான் ஆக வேண்டும் என்று அப்போது மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் என்னிடம் பணமில்லாததால் வீட்டில் பிரசவிப்பதில் உறுதியாக நின்றேன். பணமில்லை என்றால் பரவாயில்லை, பணம் கிடைக்கும் போது செலுத்தலாம். எப்படியாயிலும் மருத்துவ மனையில் தான் பிரசவிக்க வேண்டும் என்று மருத்துவ ஊழியர்கள் பிடிவாதமாகக் கூறினார்கள். இறுதியில் நான் மருத்துவ மனையில் பாதுகாப்பாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்."உள்ளூர் அரசுகளின் கொள்கை படி லீ அம்மையார் போன்ற ஏழைகள் மருத்துவ மனையில் பிரசவித்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியம் கிடைக்கும் மற்ற கட்டணம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும். இதனால் லீ அம்மையார் மருத்துவ மனையில் பாதுகாப்பாக ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

2000ம் ஆண்டு முதல் இம்மாவட்டம் மொத்த 1300க்கும் அதிகமான வறிய கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்மணிகளுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் யூவான் நிதி உதவி வழங்கியுள்ளது. இதனால் 70 விழுக்காடு கருவுற்ற பெண்கள் மருத்துவ மனையில் பாதுகாப்பாக பிரசவிக்க முடிந்தது. இந்த விகிதாசாரம் குறைவாக இருந்த போதிலும் முன்பை விட பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்மணிகளின் மரண விகிதம் 1999ம் ஆண்டில் இருந்ததை விட 75 விழுக்காடு குறைந்துள்ளது என்று முச்சுவான் மாவட்ட கம்யூனிஸ்ட்க் கட்சி கமிட்டியின் செயலர் யெ சான் சியான் கூறினார்.