• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-23 15:52:40    
சீன இந்திய நட்புறவு ஆண்டுக்கான கட்டுரை போட்டிக்கு பாண்டிச்சேரி என்.பாலகுமார் எழுதிய கட்டுரை

cri
நான் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய முடியும்? என்பது எதிர்காலம். (நாம் என்ற நிலையிலேயே உடனே எதுவும் செய்ய முடியாத போது, தனி ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும்?. சிந்தித்து பார்க்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்றால், கனவுதான் காண வேண்டும். என்ன செய்ய முடியும் என்றால் கண்ட கனவு நிறைவேறுகிறதா என்பதைக் கண்காணிக்க முடியும். இதையே கடந்த 50 ஆண்டுகளில் நாம் என்ன செய்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம், இன்னும் என்ன செய்ய முடியும் என்று எண்ணி பார்க்க வேண்டும்.

இந்த 50 ஆண்டுகளில் நமது வரலாறு ஒட்டுமொத்தமாக நெகடிவாகவும் இல்லை, பாசிட்டிவாகவும் இல்லை. எங்கே எல்லாம் நம்மால் முடிந்தவரை ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோமோ அங்கே எல்லாம் நல்ல விளைவுகளைக் காண்கிறோம். எந்த அம்சங்களை நாம் இன்னும் முழுமையாக அல்லது சரியான அர்த்தத்தில் முறையாக ஐனநாயகப்படுத்தவில்லையோ அந்த அம்சங்களால் எல்லாம் நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறோம்.

கடந்த கால நினைவுகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே மலர்ந்த இந்த நட்புறவை, 50வது ஆண்டைக் கொண்டாடுவது என்பது சாதனைகளில் சாதனை. இந்தியாவும் சீனாவும் எப்போதுமே உதாரணம் காட்டப்படும் நாடுகளில் ஒன்று. அவற்றில் வேற்றுமையில் ஒற்றுமை, லட்சியங்கள், வளர்ச்சியின் பிரம்மாண்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த 50 ஆண்டுகளில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே உள்ளன. இந்த பரிணாம வளர்ச்சிக் கதைகள் இரு நாட்டிற்குமே சொந்தமானவை. அரசியல்ரீதியிலும் பரிபூரணமான வளர்ச்சி இப்போதும் இருக்கிறது. இடையே ஏற்பட்ட போரை தவிர்த்து. உண்மையில் எண்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட பாமர மக்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. தற்போது அந்த நம்பிக்கையை வளர்க்க சில ஆண்டுகளே போதும்.

இந்த 50 ஆண்டுகளில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளை, எல்லையோர பிரச்சனை தீர்வுகாணவே கழித்துவிட்டோம். மீதி இருந்த ஆண்டுகளில், உலக நாடுகளுக்கு, இந்த நட்புறவின் பிம்பத்தைப் பிரதிபலிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துவிட்டோம். இப்போதுதான் சிலவற்றில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுபடியாக பார்த்து பார்த்து செய்து வருகிறோம். பொதுவாகவே இரு நாடுகளும், வேறு வேறு நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவிற்கும், இந்த நட்புறவிற்கும் வேற்றுமை உண்டு. மக்கள் வாழ்க்கையை வளம் பெறச் செய்வதற்கான மன உறுதி இருப்பதால் வரும் 50 ஆண்டுகள், கடந்த 50 ஆண்டுகளை விட சிறப்பானதாக இருக்கும். இந்த நட்பு எத்தனை வலிமையானது என்பது, இன்னும் சில வருடங்களிலேயே தெரிந்துவிடும். இதுதான் சுதந்திர இந்தியாவில் கண்ட பலன். இதுவரை, நான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதைவிட நாம் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்த்தேன்.

சில வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டிய அதேவேளையில், முன்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். இப்படி ஒரு பொற்காலம் எப்போதும் வாய்த்ததில்லை இந்தியாவுக்கும், சீனாவிற்கும். உலகத்தின் பார்வை இருநாடுகளின் மீது இப்போது இருப்பதைப் போல எப்போதும் இவ்வளவு சாதகமாக இருந்ததில்லை.

இப்போது என்னால் என்ன செய்ய முடியும் என்று பல வழிகளில் சிந்தித்துப் பார்க்கிறேன். தற்போது கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகனாக இருப்பதால், இரு நாட்டு மக்களிடம் உள்ள பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், சீன மக்கள் என் உடன்பிறவாச் சகோதரர்கள் என்ற மனப்பான்மையை வளரும் தலைமுறையிடம் எடுத்துரைப்பேன். இந்தியர்களை வெளிநாட்டு சுற்றுலா செல்ல சீனாவை முதலில் தேர்வு செய்ய வைப்பேன். நானும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு, சீனாவின் பழக்க வழக்கங்களும், இந்தியாவின் பழக்க வழக்கங்களும் ஒன்றுக்கென்று பிணைந்து இருப்பதால், அவற்றுள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இனம் கண்டு இந்தியர்களிடம் எடுத்துரைப்பேன். இரு நாடுகளின் வளர்ச்சி, மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென்று தினமும் கனவு காண்பேன். சீன மொழி கற்க வேண்டும் என்ற, எனது ஆர்வத்தை மற்றவர்களிடமும் வளர்ப்பேன்.

இதுவே நான் தொழில் அதிபராக இருந்தால், என்னுடைய தொழில் மூதலீடுகளையும், வர்த்தக விரிவாக்கத்தையும் முதலில் சீனாவில் தான் மேற்கொள்ளுவேன். அத்தோடு சீன மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேலும் உயர்த்த பாடுபடுவேன். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப சீனாவிற்கு நான் செய்த பலன், இந்தியாவிற்குத் தானே வந்து சேரும்.

இதுவே, நான் அரசு அதிகாரம் படைத்தவராக வலம் வந்தால், இரு நாட்டிற்கும் அதிவிரைவாக வளர்ச்சி காண முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த துடிப்புடன் பாடுபடுவேன். சீனா மீண்டும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாது என்ற திடமான நம்பிக்கையில், இந்திய எல்லையோரத்தில் உள்ள ராணுவ பலத்தைக் குறைப்பேன். அணுவை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துவோம் என்ற இந்திய-சீன கொள்கையை போற்றி பாதுகாப்பேன். வர்த்தகம் பெருக ஏற்றுமதி, இறக்குமதியில் வரிச் சுமையை குறைந்து, வருவாயைப் பெருக்க வழி காண்பேன். சீன முதலீட்டாளர்களை, இந்தியாவில் முதலீடு செய்ய வைப்பது போல், இந்திய முதலீட்டார்களை, சீனாவில் முதலீடு செய்ய வைத்து தொழில் வளம் பெருக்குவேன். சீன மொழி பரப்பும் சீன கல்வி அமைச்சகத்தின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். விண்வெளி, விளையாட்டு, ராணுவம், விமானம் இதுபோன்ற முக்கியமானவைகளில் இணைந்து செயல்படுத்தவும், வல்லரசாக உள்ள, இந்த இரு தேசங்களை இணைந்தே இருப்பவை என உலக நாடுகள் எண்ணும் அளவிற்கு உயர்த்துவேன். பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி, தகவல் புரட்சி போன்றவற்றை இரு நாடுகளுக்கும் பரிமாற்றம் செய்ய வைப்பேன். அதே போல் இரு நாடுகளில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை அழியாமல் பாதுகாப்பதுடன், ஒன்றுக்கு ஒன்று இணைத்து சுற்றுலா வளர்ச்சிக்கு உதவிட முயற்சிப்பேன். முக்கியமாக சீனாவுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் போல் "ஆசியன்" என்ற ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என்று முன்னால் இந்திய ஜனாதிபதி கண்ட கனவை நிறைவேற்ற பாடுபடுவேன். உலக நாடுகள், இந்தியாவையும், சீனாவையும் மிரட்ட பயன்படுத்தும், காஷ்மீர், தைவான் பிரச்சனைகளுக்குக் கூட்டு முயற்சியில் தீர்வு காண்பேன்.

அந்த கனவுகள் நனவாக சில அடிப்படை மாற்றங்கள் நமக்குள் நிகழ்ந்தாக வேண்டும். அந்த அடிப்படை மாற்றங்கள் கூட இப்போதைக்கு கனவாகத்தான் இருக்கிறது. என்றாலும் அவை நடைமுறைப்படுத்தக்கூடிய கனவுகள்தான். ஆனால், நடைமுறைப் படுத்தக்கூடியவை என்றுதான் சொல்லலாமே ஒழிய, எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடியவை என்று சொல்லமுடியாது. இருக்கட்டுமே, ஜனநாயகத்தின் சுவாரஸ்யமே அதில்தானே அடங்கியிருக்கிறது!

இத்துடன் என் கனவு கலைகிறது. நான் தூங்கி விழுந்து எழுந்திருக்கும் போது அல்ல, விழிப்புணர்ச்சியுடன் எழுந்திருக்கும் போது, நான் கண்ட கனவு நிறைவேறி இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

சீன-இந்திய நட்புறவில் தனி ஒரு மனிதன், இன்னும் என்ன செய்ய முடியுமோ, அவை அனைத்தும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.