• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-13 20:40:47    
புதிய யோசனைகள் செல்வத்தைக் கொண்டு வரும்

cri

புதிய யோசனைகள், மக்களின் வாழ்க்கையிலும் பணியிலும் உதித்து, மக்களுக்கு மாபெரும் செல்வத்தைக் கொண்டு வர முடியும். புதிய யோசனைத் துறை, சீனாவில் புதிய ரகத் துறையாக மாறியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், பெய்ஜிங்கில் புதிய யோசனைத் துறையின் வளர்ச்சி பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

2005ம் ஆண்டில் நிறுவப்பட்ட GOGO TIME என்னும் தொழில் நிறுவனம், பெய்ஜிங்கின் ZHONG GUAN CUN அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. இத்தொழில் நிறுவனம், தற்சார்புப் புத்தாக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, குறுகிய எட்டு திங்களில் multimedia புத்தகத்துறையில், 2 கோடி யுவான் லாபம் பெற்று, பெய்ஜிங்கின் நடு மற்றும் சிறிய ரக புதிய யோசனை தொழில் நிறுவனங்களில் முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் துணை தலைவர் XIONG LEI பேசுகையில், multimedia புத்தகத்தை, தொழில் நிறுவனத்தின் பிரச்சாரத்துடன் இணைப்பது, வெற்றிப் பெறுவதற்கு காரணமாகும் என்று விளக்கிக்கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

multimedia புத்தக சந்தையில் உள்ளார்ந்த ஆற்றல் மிக்கது என்பதைப் பார்த்த போது, multimedia மற்றும் டிஜிட்டல் தொழில் நட்பத்தை சேர்த்து ஒரு புதிய மேடை உருவானதாக கருதுகின்றோம். இம்மேடையில், தொழில் நிறுவனங்களின் வணிகத் தேவையை மேலும் நன்றாக எடுத்துக்காட்டி, மேலும் அதிகமான தொழில் நிறுவனங்களுக்கு வணிக பிரச்சாரம் என்ற சேவையை வழங்கலாம். BIRD செல்லிட பேசி நிறுவனம், CHUANG WEI குழுமம் உள்ளிட்ட பல பெரிய குழுமங்கள், எமது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன என்றார் அவர்.

multimedia புத்தகத்தில், FLASH, குறுந்திரைப்படம், பின்னணி இசை, ஒலி முதலியவை இடம்பெற்று, எழில் மிக்க உள்ளடக்கம் கொண்டுள்ளது. இணைய தளம், செல்லிட பேசி, கையடக்க கணிணி உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

மேலும் அதிகமான நடு மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு வணிக பிரச்சாரச் சேவையை வழங்கும் பொருட்டு, GOGO TIME, சிறப்பு தயாரிப்பு மென்பொருட்களை ஆராய்ந்து வளர்த்துள்ளது. தொழில் நிறுவனங்கள் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி, அன்றாட அறிக்கை, குறிப்பிட்டக் காலத்தொகுப்பு, திட்டப்பணி விண்ணப்பம், பரிந்துரைத் திட்டம், தொழில் நிறுவனத்தின் அறிமுகம் முதலியவற்றைத் தயாரிக்க முடியும். GOGO TIME தொழில் நிறுவனத்தின் யோசனை, பல தொழில் நிறுவனங்களின் தேவையை நிறைவு செய்துள்ளது. இதனால், சீனாவின் புகழ்பெற்ற சின்னங்கள் பல, அதன் வாடிக்கையாளர்களாகியுள்ளன.

Multimedia மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பச் சேவையை வழங்கும் நிறுவனமான GOGO TIME தொழில் நிறுவனம், தொழில் நுட்ப ஆய்வு வளர்ச்சியில் முழுமூச்சுடன் முதலீடு செய்தது, குறுகிய காலத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகும். இது குறித்து XIONG LEI கூறியதாவது:

சந்தையின் தேவைக்குப் பொருந்தியது என்பது, தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாகும். எனவே, தொழில் நுட்ப புத்தாகத்தையும், அதன் பயன்பாட்டையும் வலுப்படுத்தியது, எமது தொழில் நிறுவனம் வெற்றிபெறுவதற்கும் காரணமாகும். வாடிக்கையாளரின் தேவை, எங்கள் தொழில் நுட்ப புத்தாக்கத்தைத் தூண்டும் ஆற்றலாக மாறியுள்ளது. மேலும், நாங்கள் தொழில் நுட்ப புத்தாக்கத்தில் கவனம் செலுத்தி, இந்த மேடையை வளர்க்க, பெருமளவு மனிதவளத்தையும் நிதியையும் முதலீடு செய்து வருகின்றோம் என்றார் அவர்.

தொழில் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அவர் பேசுகையில், Multimedia சீனா என்ற இணையத்தளத்தை GOGO TIME நிறுவ வேண்டும் என்றும், சர்வதேசத்தில் வணிக பிரச்சார திட்டப்பணிகளைப் பொறுப்பேற்க முயன்று, தமது வணிகச்சின்ன புகழையும் லாபம் பெறும் திறனையும் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாண்டு, GOGO TIME இன் விற்பனைத் தொகை, 20 கோடி யுவானை எட்டி, அடுத்த மூன்று ஆண்டுகளில் வருடாந்திர அதிகரிப்பு, 100 விழுக்காட்டை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

GOGO TIME, கடந்த சில ஆண்டுகளில் பெய்ஜிங்கில் நிறுவப்பட்ட புதிய யோசனை தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், இத்துறையில், வலுவான வளர்ச்சி போக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு, பண்பாட்டு புதிய யோசனை துறையின் உற்பத்தி மதிப்பு, சுமார் 9600 கோடி யுவானாகும். பெய்ஜிங் சமூக அறிவியலகத்தின் பொருளாதார ஆய்வு அலுவலகத்தின் துணை தலைவர் ZHAO HONG பேசுகையில், பெய்ஜிங், வலுவான பண்பாட்டு கல்வி மற்றும் திறமைசாலி மூலவளத்தைக் கொண்டிருப்பதால், மென்பொருள், இணையம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் உறுதியான தொழில் நுட்ப மற்றும் தொழில் துறை அடிப்படை உண்டு. இவை, GOGO TIME போன்ற புதிய யோசனை தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான மேம்பாட்டு நிபந்தனையை வழங்கியுள்ளன என்று கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பெய்ஜிங், சர்வதேசமயமாக்க மிக்க மாநகரமாகும். பல்வேறு நாடுகளின் பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கைகள் இங்கு நடைபெற்று வருகின்றன. இதனால், புதிய யோசனை, புதிய கருத்து, புதிய எண்ணம் ஆகியவை பெய்ஜிங் வந்தடைந்தன என்றார் அவர்.

பெய்ஜிங்கில் சுமார் 3 லட்சம் அறிவியல் ஆய்வாளர்களும், 70க்கு கூடுதலான பல்கலைக்கழகங்களும், தொழில் துறையின் உருவரைவு, ஆடை, விளம்பரம் ஆகியவற்றில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் புதிய யோசனை தொழில் நிறுவனங்களும் உள்ளன.

இந்தத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் பொருட்டு, பெய்ஜிங் அரசும், ZHONG GUAN CUN அறிவியல் தொழில் நுட்ப மண்டலமும் முன்னுரிமை கொண்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தொழில் நிறுவனங்கள் தொடர்புடைய வாரியங்களுடன் தொடர்பு கொள்வதற்கு, ZHONG GUAN CUN அறிவியல் தொழில் நுட்ப மண்டலம் பொது மேடையை உருவாக்கி வழங்கியுள்ளது. அண்மையில், பெய்ஜிங் GEHUA பண்பாட்டு வளர்ச்சி குழுமமும், இம்மண்டலமும், பெய்ஜிங் புதிய யோசனை தொழில் துறை மையத்தைக் கூட்டாக நிறுவியுள்ளன.

இம்மையம், பெய்ஜிங்கின் புதிய யோசனை தொழில் துறையில் முன்மாதிரி பங்காற்றியுள்ளது என்று, GEHUA குழுமத்தின் வெளி தொடர்பு பொறுப்பாளர் SHI JING SHENG கூறினார்.

பெய்ஜிங் சமூக அறிவியலகத்தின் பொருளாதார ஆய்வு அலுவலகத்தின் துணை தலைவர் ZHAO HONG பேசுகையில், அடுத்த சில ஆண்டுகளில் பெய்ஜிங்கில் புதிய யோசனை தொழில் துறையின் வளர்ச்சி போக்கு, மேலும் வலுவடையும். பண்பாட்டு புத்தாக்க தொழில் துறையை, அடுத்த 5 ஆண்டுகளில் பெய்ஜிங்கின் நெடுநோக்கு தொழில் துறையாக பெய்ஜிங் அரசு இயற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தையின் ஆற்றல், அரசின் வழிகாட்டுதல் மற்றும் மேம்பாட்டுடன், இத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று தெரிவித்தார்.