• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-13 20:56:04    
கால்பந்தாட்ட விருதுகள்

cri

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளின் தலைசிறந்த ஆட்டக்காரர்களின் அற்புதமான திறமைகள் இப்போட்டியில் வெளிப்பட்டன. ஆசிய பகுதியில் கால்பந்தாட்டம் ஓரளவுக்குத்தான் புகழ்பெற்றது எனலாம் ஆனால் ஐரோப்பியக் கண்டத்தில் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தனிப்பட்ட முறையில் கால்பந்தாட்ட குழுக்களை உருவாக்கி ஆண்டுதோறும் இக்குழுக்களிடையே போட்டிகளை நடத்தி வருகின்றன.

இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றின் இத்தகைய குழுக்களின் இந்நாட்டு வீரர்கள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நாடுகளின் வீரர்களும் இணைந்து, பெரும் பெருளும், புகழும் ஈட்டி வருகின்றனர். ஆக உலகில் இந்த கால்பந்தாட்டத்தை ஒரு தொழிலாகவே ஆக்கி விளையாடி மகிழும் இன்பத்தோடு, வருமானத்திற்கும் வழி தேடிக்கொண்ட கால்பந்தாட்ட விரர்களிடையில், தங்களுக்குள்ளாக ஒரு வாக்களிப்பு நடத்தில் உலகில் யார் சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை வழங்கி மகிழ்கின்றனர்.

இந்த சிறந்த ஆட்டக்காரர் விருதுக்கான வாக்களிப்பில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 43 ஆயிரம் கால்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். கடந்த 2004 - 2005ம் ஆண்டில் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரராக கால்பந்தாட்ட வீரர்களாயே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசில் நாட்டு வீரர், ஸ்பெயின் நாட்டு பார்சலோனா கால்பந்தாட்டக் குழுவில் விளையாடி வரும் ரொனால்டின்யோ, மீண்டும் இவ்வாண்டும் தலை சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லையோனல் மெசி இளம் ஆட்டக்காரராகவும், கிரிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களின் தேர்வில் சிறந்த இளம் ஆட்டக்காரராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பான ஆட்டம் மட்டுமன்றி கால்பந்தாட்டத்தில் இன பாகுபாட்டையும், இனவாதத்தையும் எதிர்த்து செயல்பட்ட கேமரூன் நாட்டு சாமுவல் எட்டோ சிறப்பு விருதுக்கான நபராக தெரிவு செய்யப்பட்டர்.

பூப்பந்து விளையாட்டுப் போட்டி:

டென்மார்க் நாட்டு ஆர்ஹுஸ் நகரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் பூப்பந்து போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சீனா வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஆடவர் பிரிவில் சீனாவின் சென் ஹுங் மற்றொரு சீன வீரர் சென் யுவை 21 - 18, 21 - 18 என்ற நேர் செட்களில் வென்று ஒற்றையர் பிரிவின் பட்டத்தை வென்றார். மகலீர் பிரிவில் சீனாவின் சியாங் யாஞியாவ் மற்றொரு சீனரான லூ லானை 21 - 14, 21 - 14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் டென்மார்க் நாட்டு லார்ஸ் பாஸ்கேவும், ஜோனாஸ் ராஸ்முசேனும், தமது நாட்டைச் சேர்ந்த மற்ற இணையான மத்தியாஸ் போ, ஜோக்கிம் ஃபிஸர் இணையை வென்றனர். போலந்து நாட்டு கமீலா அகஸ்டின், நாடியேஸ்டா கோஸ்டியூசிக் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற, இங்கிலான்ந்தின் ஆந்தனி கிளார்க், டோன்னா கெல்லாக் இணை கலப்பு இரட்டையர் பிரிவை வென்றது.