
சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், மணல் தூசிக்குப் பெயர் பெற்ற ஒன்று. ஆனால், அங்குள்ள பூஹாய் கவுண்டி,(FUHAI COUNTY)பசுமைப் பிரதேசமாகக் காட்சியளிக்கின்றது. இது, வடக்கே அல்டாய் (ALTAI) மலைப்பிரதேசம் வரையிலும், தெற்கில் உள்ள சமவெளி மற்றும் பாலைவனப் பிரதேசம் வரையிலும் நீண்டு காணப்படுகிறது.
இந்த வளமான பிரதேசத்தின் ஊடாக உலுங்கூர்(ULUNGUR), எர்டிக்ஸ்(ERTIX) எனும் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. இப்பிரதேசத்துக்கு மேலும் வளம் சேர்க்கின்றன. அல்க்ஸா இயற்கைப் பிரதேசம்(ALXA NATURE RESERUE), வெந்நீர் ஊற்றுக்களுக்குப் புகழ் பெற்றது.
இது, பூஹாய் கவுண்டியில் தான் அமைந்துள்ளது. தவிர, (வண்ணத்துப் பூச்சி)பட்டாம் பூச்சிப் பள்ளத்தாக்கும் உலுங்கூர் ஏரியும் இங்கே உண்டு. சீனாவில் உள்ள 10 மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் உலுங்கூர் ஏரியும் ஒன்று. 1035 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரிய பகுதி புலுந்துவா (BULUNTUOLAKE)ஏரி என்றும், சிறிய பகுதி ஜிலி(JILI) ஏரி என்றும் வழங்கப்படுகின்றன. இந்த உயரமான இடத்திலிருந்து சீனா, மங்கோலியா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளைக் கண்ணாரக் கண்டு களிக்கலாம்.
வெகு சிறப்பான இயற்கை அழகு மிகுந்த பூஹாய் கவுண்டி, சீனாவின் பாலைவனச் சோலை எனும் பெருமை பெற்று விளங்குவதில் வியப்பேதுமில்லை.
|