• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-30 18:56:34    
சீனாவின் தடுக்கப்பட்ட நகரம்

cri

பெய்ச்சிங் மாநகரின் மையத்தில் சிவப்பு சுவரும் மஞ்சள் பளபளப்பான ஓட்டு கூரையும் கொண்ட, அரண்மனைக் கட்டடங்கள் காணப்படுகின்ரன. இது, சீனாவின் அரண்மனை அருங்காட்சியகம் ஆகும். தடுக்கப்பட்ட நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது.

15வது நூற்றாண்டின் மின் அரச காலத்திலும் 17வது சிங் அரச காலத்திலும் இது அரண்மனையாக விளங்கியது. இந்த அரண்மனை, 1420ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டு, இதுவரை, 570 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மின் அரச காலத்தின் 3வது பேரரசர் சூதி முதல், சிங் அரச காலத்தின் கடைசி பேரரசர் வுயி வரை, மொத்தம் 24 பேரரசர்கள் இங்கு வாழ்ந்தனர்.

இதன் கட்டட கட்டமைப்பும் வடிவமைப்பும் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் சீன அரண்மலைகளின் கட்டடங்களில் மிக சிறந்து விளங்குகின்றன என்று கூறலாம். 7 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புடைய இவ்வரண்மனை, நீள் சதுர வடிவமானது. இதன் இடது பகுதியும் வலது பகுதியும் சரி சீரமைவாகக் காணப்படுகின்றன. இதன் சுற்றுச் சுவர்கள், ஏறக்குறைய 8 மீட்டர் உயரமுடையது.

அரண்மனை சுவர்களைச் சூழ, 53 மீட்டர் அகலமுடைய பாதுகாப்பு ஆறு ஒன்று உள்ளது. சுவர்களின் 4 மூலைகளிலும் விய தகு கட்டமைப்புடன் கூடிய 4 அழகான காவல் மாடங்கள் உள்ளன. தடுக்கப்பட்ட நகரில் 9900க்கு கூடுதலான அறைகள் உள்ளன.

உயரமும் தாழ்வுமான பல அரண்மனை மாளிகைகள், செவ்வொழுங்கான கட்டடக் கூட்டமாகவே அமைகின்றன. வெண் சலவைக்கல் வேலிகள் சுற்றியுள்ள மேடையில், தெஹொ, சொங்ஹொ,பௌஹொ ஆகிய மாளிகைகள் முன்புறத்தில் இருக்கின்ரன.

அவை, அரண்மனையின் மிக முக்கிய கட்டடங்களாக விளங்குகின்ரன. பேரரசர்களின் சிம்மாசன விழா உள்ளிட்ட முக்கிய விழாகள், அவற்றிலே தான் நடைபெற்றன. அரண்மனையும் முழு பெய்ச்சிங் மாநகரமும் பேரரசர்களின் தவிசை, நடுக்கோடாகக் கொள்கின்றன.

அவற்றின் பின்புறத்திலும் 3 மாளிகைகள் உள்ளன. பேரரசர்கள் அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளும் இடமும், அவர்களும் பேரரசிகளும் வாழும் இடமும் ஆக, அவை திகழ்கின்றன. கிழக்கு புறமும் மேற்கு புறமும், காமக் கிழத்திகள் மற்றும் இளவரசர்கள் வாழும் இடங்களாகும்.

அவற்றுக்குப் பின்னால், அழகான பூங்கா ஒன்று உள்ளது. அரண்மனைக் கட்டடங்கள், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் படிநிலை அமைப்பு முறையையும் பிரதிபலிக்கின்றன. பேரரசர்கள் மற்றும் பேரரசிகளின் மாளிகைகள், உயரமாகவும் பெரியதாகவும் இருக்கின்றன.

காமக் கிழத்திகளின் வீடுகள், சற்று தாழ்வாக உள்ளன. பணியாளர்களின் அறைகளோ, தாழ்வாகவும் சிறியதாகவும் இருக்கின்றன. தடுக்கப்பட்ட நகரின் கட்டுமான பணிக்கான கட்டட பொருட்கள், மிகவும் சிறப்பாக இருக்கின்ரன.

மரத் துண்டுகள், தொலை தூரத்தில் உள்ள தென் சீனாவின் காடுகளிலிருந்து வெட்டிப்பட்டவையாகும். அவற்றில் பெரும்பாலானவை, NANMU என்னும் மரங்களாகும். கல் பொருட்கள் பொறுத்து, வெண் சலவைக் கல்கள், பெய்ச்சிங்கின் புற நகரப்பகுதியில் உள்ள வாங்சென் மாவட்டத்திலிருந்து உற்பத்தியானவை.

தரையில் போடப்பட்ட நீல வெண் கல்கள் மேலும் தூரத்தில் உள்ள பெங்சென் மலையிலிருந்து ஏற்றி வரப்பட்டவை ஆகும். வரலாற்றேடுகளின் படி, தடுக்கப்பட்ட நகரைக் கட்டியமைத்த போது, முழு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து புகழ்பெற்ற வல்லுநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

தவிர, இரண்டு, மூன்று லட்சம் உழவர்களும் ஒரு பகுதி படையினரும் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இவ்வரண்மனையின் கட்டுமானத்தை நிறைவேற்றுவதற்கு, 15 ஆண்டுக்காலம் பிடித்தது.

1911ல் திரு சென்சொன்சான், புரட்சிக்கு தலைமை தாங்கி, சிங் அரச குலத்தைத் தூக்கியெறிந்து, சீன குடியரசை நிறுவினார். பேரரசர் பதவியிலிருந்து விலகி, அரண்மனையினை விட்டு வேறு இடத்துக்கு மாறினார்.

500 ஆண்டுக்கால வரலாறுடைய இந்த அரண்மனை 1925ல் அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இன்று, இந்த அரண்மனை அருங்காட்சியகம், சீனாவில், மிகப்பெரிய அளவும் மிக கூடுதலான தொல் பொருட்களும் உடைய ஒன்றாகும். பேரரசர்கள் வேலை செய்யும் இடங்களும் பேரரசர் மற்றும் பேரரசிகள் வாழும் இடங்களும் முன்பு இருந்தது போல நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று கலை மண்டபம், ஓவிய மண்டபம், செம்பு பொருட்கள் மண்டபம், மின் மற்றும் சிங் அரச குல காலங்களின் கலை கைவினை பொருட்கள் மண்டபம் ஆகியவை உடப்ட, 10க்கும் அதிகமான கண்காட்சி மண்டபங்கள் அரண்மனையில் நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், அதற்கு வருகை தருகின்றனர்.