• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-14 08:40:14    
கோழி பற்றிய பேச்சோடு பேச்சு

cri
கோழி வளர்ப்பதே கொல்வதற்காகத்தான் என்கிறார்கள். யாராவது விருந்தினர் வந்து விட்டால் கோழியடித்து விருந்து வைக்கிறோம். ஒரு காலத்தில் கிராமங்களில் கோழி வளர்க்கப்படாத வீடுகளையே பார்க்க முடியாது. படுக்கையில் மொய்க்கும் மூட்டைப்பூச்சிகளைப் போல வீடெங்கும் தன்குஞ்சுகளுடன் கோழிகள் திரிந்து கொண்டிருக்கும். சில சமயங்களில் அடுத்த வீட்டுக்காரி போடும் தானியங்களையும் கொத்தித்தின்று விட்டு, சண்டை இழுத்துக் கொண்டு வரும். கெக் கெக் என்று கேறிக் கொண்டு கோழி வரும் போது, உடனே அதைப் பிடித்து பந்தாரத்துக்குள் அம்மா அடைத்து வைப்பாள். சிறிது நேரத்தில் முட்டை போட்டுவிடும். சீனாவில் சில அவசரக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் Shi Yi Qu Nuan முட்டை எடுப்பதற்காகக் கோழியையே கொன்று விடுவார்களாம். பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்லும் அவசரபுத்திக்காரனைப் பற்றித்தானே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்! இன்னும் சிலரோ, சீனாவில் குரங்கைப் பயமுறுத்துவதற்காகக் கோழியைக் கொல் வார்களாம்-Sha Ji Jing Hou-அதாவது கோழியைக் கொல்வதைக் கண்டதும் குரங்கு பயந்து ஒழுங்கான வழிக்கு வருமாம். கோழி என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய் விட்டதா? ஆனால் பலசாலிக்கு எச்சரிக்கை விட, பலம் குறைந்த வனைத்தானே தாக்க வேண்டியுள்ளது. சீனாவிலே இது தொடர்பாக இன்னொரு பழமொழியும் சொல்வார்கள்-சிங்கத்தைப் பயமுறுத்த குரங்கை அடிப்பார்களாம். சிறிய ஊழல் செய்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தால் பெரிய ஊழல் செய்தவர்கள் பயப்படுவார்களாம்.

சரி, கோழியைக் கொல்வதுதான் கொல்கிறோம். அதற்கு மாடு வெட்டும் கத்தியையா பயன்படுத்துவது?-Sha Ji He Yong Niu Dao-ஈயடிக்க சுத்தியல் எதற்கு? எல்லாம் காரணமாகத்தான். அடைகாக்கும் கோழி அவசரப்பட்டு பறந்தால், எல்லா முட்டைகளும் உடைந்து போகாதா? Ji Fei Dan Da-

சீனாவிலே கோழிக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம். இரண்டையும் ஓரிடத்தில் விட்டு வைத்தால் அங்கே அமைதி இருக்காதாம்!-Ji Quan Bu Ning-ஒரே கலாட்டாதான்! கோழியும், நாயும் சேர்ந்து மனிதர்களுடன் சொர்க்கத்திற்குப் போகுமாம். பெரிய தலைவர்களின் பிள்ளைகள் குட்டித் தலைவர்களாகவும், இளைய தளபதிகளாகவும் அரசியலில் உருவெடுப்பதில்லையா? அது போல.