அடுத்த ஆண்டு சீனப் பொருளாதார எதிர்காலம்
cri
தற்போது, சீனா, வலுவான அதிகரிப்புப் போக்குடைய பொருளாதார சமூகமாகவுள்ளது. அடுத்த ஆண்டு, பொருளாதாரத்தின் எதிர்காலம் நம்பிக்கை ஆர்வம் தருகின்றது என சீன அரசு அவையின் கீழுள்ள அரசு சார் சொத்துரிமை கண்காணிப்பு-நிர்வாகக்கமிட்டியின் ஆய்வு மையத்தின் தலைவர் வாங் சுங் மின் கூறியுள்ளார். நேற்று சீனாவின் மிகப் பெரிய தொழிற்துறை வணிக நகரான ஷாங்காயில் உலக சீனர் தொழில் நிறுவனத்து தலைவர்களின் 4வது உச்சி மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டு சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் தொடர்ந்து சீராகவும் வேகமாகவும் அதிகரித்துள்ளது என்றார். இதற்கு மூலதனச் சந்தையிலான சுறுசுறுப்பும், நிதானமான எரியாற்றல் விநியோகமும் இரண்டு பெரிய உதாரணங்களாகும். தவிரவும், 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் என்னும் பெரும் பின்னணியும், புதிய கிராமத்தை நிர்மாணிப்பது, இணக்க சமூகம் மற்றும் புத்தாக்க ரக நாட்டை அமைப்பது உள்ளிட்ட முக்கியக் கொள்கைகளும், சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும் அவர் சொன்னார். உலக வங்கியின் மதிப்பீட்டின் படி, இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதம், 10.4 விழுக்காட்டை அடையக்கூடும்.
|
|