• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-15 09:43:12    
மங்கோலிய இனம் பற்றி

cri

உணவு பழக்கத்தில், மங்கோலிய இன மக்களிடை, "வெள்ளை நிறத்துடன் தொடர்புடைய பழக்கவழக்கம் உருவாயிற்று. வெள்ளை நிற பொருட்களைச் சாப்பிடுவது அவற்றில் ஒன்றாகும். மங்கோலிய இனத்தின் பாரம்பரிய வழக்கத்தின் படி, வேளாண்துறையில் அமோக அறுவடை பெறும் போது அல்லது, போர்வீரர்கள் வெற்றி பெற்று திரும்பும் போது, மக்கள் எனவும் இன்பம் எனவும் காட்டுவதற்காக இவ்வுணவு விருந்து நடைபெறும். இவ்விருந்தில், வெள்ளை நிற உணவுப் பொருட்கள் முக்கியமாக இடம்பெறும். பால் தயாரிப்பு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. கூட்டம் கூட்டமான ஆடுகளும் மாடுகளும் உள்ள உளமங்கோலிய புல்வெளியில், வெள்ளை நிற பால் தயாரிப்பு பொருட்கள் பல்வகையானவை. பால்தேனீர் பால் மதுபானம், பாலாடைக்கட்டி, தயிர் முதலியவை, மங்கோலிய இன மக்களின் அன்றாட உணவுப் பொருட்களாகும்.

மங்கோலிய இனத்தின் திருமண விழாவில், வெள்ளை நிறம், மங்களத்தின் அடையாளம் எனக் கருதப்படுகின்றது. திருமண விழாவில், இரு தரப்பினரும், வெள்ளை நிற பட்டுத் துணியை வழங்க வேண்டும். மணமகன் மனமகளை வரவேற்கும் போது, தம் இடுப்பில், வெள்ளை நிற துணியைப் போட்டு, மணமகளுடன் சேர்ந்து, வெள்ளை நிற பால் குடிக்க வேண்டும். திருமண விழாவில் மணமகனும் மணமகளும் தமது இரு கைகளையும் வெள்ளை நிற துணி பையில் நீட்டி, பின்னர் மரியாதை செலுத்துவார்கள்.

நேயர்களே, வாய்ப்பு இருந்தால், உள்மங்கோலியாவின் புல் வெளிக்கு போய் மங்கோலிய இனத்தவரின் வீட்டிற்கு விருந்தினராக சென்றால், ஹதா என்னும் வெள்ளை நிற பட்டுத் துணியை அன்பளிப்பாகப் பெறலாம். அன்றி, வெள்ளி கோப்பையில் குதிரை பால் மதுபானம், தங்களுக்கு தரப்படும். இது மட்டுமின்றி, வெள்ளை நிற மங்கோலிய கூடாரங்களில் வசித்து, புல்வெளியில் வெள்ளை நிற ஈர்ப்பு சக்தியை நேரில் உணர்ந்து கொள்ளலாம்.