• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-16 19:47:35    
சீனாவில் செல்லிட பேசி

cri

2006ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் இறுதிவரை, சீனாவில் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 77 கோடியாக உயர்ந்தது. அவர்களில் 41.6 கோடி பேர் செல்லிட பேசியை பயன்படுத்துகின்றனர். தரை வழிதொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36 கோடியைத் தாண்டியது என்று சீன தகவல் தொழில் அமைச்சகம் வழங்கிய புள்ளி விபரம் காட்டுகின்றது. அதன் படி, இவ்வாண்டின் துவக்கம் முதல் செல்லிட பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. முதல் நான்கு திங்களில் திங்கள் தோறும் 58 லட்சத்து 4 ஆயிரம் புதிய பயன்படுத்துவோர் அதிகரிக்கின்றனர்.

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்ததை விட சீனா முழுவதும் செல்லிட பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2 கோடியே 32 லட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தரைவழி தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை திங்கள் தோறும் 26 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஏப்ரல் திங்களின் இறுதிவரை, மொத்த எண்ணிக்கை 36 கோடியே 94 ஆயிரத்து நூறாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், செல்லிட பேசி பயன்படுத்துவோர் அனுப்பும் குறுந்தகவல்களும் மென்மேலும் அதிகமாக உள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் திங்கள் வரை, 13 ஆயிரத்து 225 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. 2005ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட இது 46.5 விழுக்காடு அதிகமாகும். தவிரவும், சீனா முழுவதிலும் தரைவழித் தொலைபேசியின் பரவல் விகிதம் 27 விழுக்காடாகவும் செல்லிட பேசியின் பரவல் விகிதம் 30.3 விழுக்காடாகவும் இருக்கின்றது.

தவிரவும், ஏப்ரல் திங்களின் இறுதிவரை, சீனாவில் அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு அலுவல் மூலம் கிடைத்த வருமானம் 22 ஆயிரத்து 931 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட இது 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. அவற்றில் தொலைதொடர்பு அலுவல் மூலம் கிடைத்த வருமானம் 20 ஆயிரத்து 816 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 11.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.