• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-15 15:55:31    
நேயர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும்

cri

க்ளீட்டஸ்: திருபுவனை ஆ. கிருஷ்ணன் எழுதிய கடிதம். செபடம்பர் 9ம் நாள் ஒலிபரப்பான சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில், தோனே இன மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரீகம், செயல்பாடுகள் ஆகியவை பற்றிய முழுமையான தகவல்களைக் கேட்டு வியந்து போனேன். உலகில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தேனே இன மக்கள் மிக நாகரீகமாவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும், கணிசமான வருமானம் உடையவர்களாகவும் உள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாத மலைவாழ் வகுதியில், சிறிய மின் உற்பத்தி கருவியின் மூலம் மின்சாரம் பெற்று தொலைக்காட்சி மற்றும் மின் சாதன பொருட்களை பயன்படுத்தி வருவது என்பது மேம்பட்ட வாழ்க்கையினை அவர்கள் வாழ்ந்து வருவதை குறிக்கிறது. மேலும் தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க வைப்பது அவர்களின் படிப்பறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதை காட்டுகிறது. நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து மதுரை என். ராமசாமி எழுதிய செப்டம்பர் 11ம் நாள் ஒலிபரப்பான பயங்கரவாத எதிர்ப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு என்ற செய்தித் தொகுப்பு பற்றிய கடிதம். கடந்த 2001, செப்டம்பர் 11ம் நாள் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களின் 5ம் ஆண்டு நினைவு அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது, வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புஷ் உரையாற்றினார். இதனிடையில் பயங்கரவாதத்தை ஒடுக்க அணிசாரா நாடுகள் பரஸ்பரம் உதவவேண்டும் என்று இந்திய தலைமையமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை உலக நாடுகள் அனைத்தும் வரவேற்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை தொண்டைமனாறு நேயர் அற்புதவேல் சசிக்குமார் எழுதிய கடிதம். நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேடு வருகிறேன். எனது நண்பர்களும் சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். வானொலிகள் என்றாலே பல விடயங்களை ஒலிபரப்புவது என்ற வகையில் சீன வானொலியின் நிகழ்ச்சிகள் இனிமையானவை. தவிர தாங்கள் அவ்வப்போது அனுப்பும் அழகிய படங்கள் சீனாவை பார்க்கும் இன்பத்தை தருகின்றன. இனிமையான இசை நிகழ்ச்சியும் எஙளை மகிழ்விக்கிறது, நன்றிகள் பல என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து நல்லாம்பட்டி நேயர் ஆர். செல்வம் எழுதிய கடிதம். 6வது ஆசிய ஐரோப்பிய மாநாடு பின்லாந்து நாட்டில் நடைபெற்றுவது பற்றி செய்தியில் கேட்டென். மேலும் இம்மாநாடு தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன அன்பதையும், அதன் அதலைவர், சீன தலைவர் ஆகியோர் மாநாட்டில் பஙேற்று அதன் நிறை குறைகளை ஆய்வு செய்தனர் என்றும் தி. கலையரசி அம்மையார் தெளிவாக செய்திகளின் மூலமும், செய்தித் தொகுப்பின் மூலமும் விளக்கினார். நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து செப்டம்பர் 14ம் நாள் ஒலிபரப்பான நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி இலங்கை கிணிகத்தேனை நேயர் வி. துரைராஜா எழுதிய கடிதம். சீனாவின் துங்கான் முதியோர் மருத்துவசாலை பற்றி அறிவிப்பாளர்கள் கலையரசி மற்றும் ராஜாராம் இருவரும் கூறியதைக் கேட்டேன். தமது இறுதி காலத்தை சுகமாக கழிக்கவும், மகிழ்ச்சியோடு உற்றார் உறவினர்களுடன் பேசி பழகவும், ஏன் ஒரு சில வீடுகளில் ஒரு வேளை உணவு கூட உண்ணமுடியாத நிம்மதியற்ற சூழலில் முதியவர்கள் பலர் இருக்கின்றனர். வயது போன பின் சிறு பிள்ளைத்தனமான போக்குகள் சில வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டது பொன்ன்ற மருத்துவசாலைகள் இருப்பது முதியவர்களுக்கு பேராறுதலை தருகிறது. 120க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 24 மணி நேர சேவை என்ற மருத்துவசாலையின் பணிகள் மிகவும் வரவேற்க்கதக்கவை. இந்நிகழ்ச்சிகைய் கேட்டு உவகையுற்றேன். தகவலை வழங்கிய கலை, ராஜ இருவருக்கும் நன்றிகள் என்று எழுதியுள்ளார்.