சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தின் மகளிர்
cri
திரிநுர் போல சிங்கியாங்கில் வாழ்கின்ற பல்வகை சிறுபான்மை இனங்களை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் பாரம்பரிய கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு உற்சாகத்துடன் சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கெடுத்துள்ளனர். சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி அரசு சளையாத முயற்சி மேற்கொண்டுள்ளது."சிங்கியாங் மகளிர் வளர்ச்சி திட்டத்தை"வகுத்து அங்குள்ள பெண்களின் வாழ்வு மற்றும் வளர்ச்சி சூழலை சீர்செய்துள்ளது. அரசு மற்றும் சமூக நிர்வாக பணிகளில் ஈடுபடுமாறு முஸ்லிம் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். தற்போது சிங்கியாங் தன்னாட்சி பிரதேசம் முழுவதிலும் பல்வேறு நிலை தலைமைப் பதவிகளை வகிக்கும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 45.5 விழுக்காடு ஆகும். பல்வேறு நிலை மக்கள் பேரவை கிளைகள், மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பெண் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின் விகிதமும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அவர்களில் சிலர் முக்கிய தலைமை பதவிகளில் உள்ளனர். 45 வயதான யெயிஹான் யூசுப் அமைதியான பொறுப்பு மிக்க உய் கூர் இன பெண்மனி. 1984ம் ஆண்டில் அவர் வடகிழக்கு நிதி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று உருமுச்சிக்குத் திரும்பி அரசு பணியாளராக வேலை செய்ய துவங்கினார். 21 ஆண்டுகளுக்கு பின் அவர் சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியின் துணைத் தலைவராக உயர்ந்தார்.
சிங்கியாங்கின் சமூக-பொருளாதார வளர்ச்சி பற்றி அவர் விவரிக்கும் போது அவருடைய வாழ்க்கை அனுபவத்தை குறிப்பிட்டார். நான் 1987ல் திருமணம் செய்தேன். குடும்ப வாழ்க்கை மிக இன்பமானது. எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. என் கணவரும் குடும்பத்தினரும் என் பணிக்கு ஆதரவளிக்கின்றனர். என் கணவர் செய்தியறிக்கை அறிவிக்கின்றார். எங்கள் வேலை அதிகமாக இருந்தாலும் பரஸ்பரம் துணையாக இருக்கிறோம். எனக்கு வேலை அதிகமாக இருக்கும் போது வீட்டு வேலைகளை என் கணவர் கவனிக்கொள்கிறார்.
|
|