• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-21 16:19:04    
பிரசவித்த பெண் மரண விகிதம் குறைப்புக்கான முயற்சி

cri

தவிரவும் இம்மாவட்டம் பல்வேறு வட்டங்களிலுள்ள மருத்தவ கிளினிக்களுக்கு கருவுற்ற பெண்களின் பிரசவத்துக்குத் தேவையான வசதிகளையும் மருந்துகளையும் வாங்கி தந்துள்ளது. அங்குள்ள மருத்துவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து தருகின்றது. இம்மாவட்டம் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் லீ அம்மையார் போன்ற கருவுற்ற பெண்கள் மலையில் வசிக்கிறார்கள். இதனால் பேருந்து மலையில் ஏற முடியவில்லை. இதன் காரணத்தால் பல்வேறு வட்டங்களில் கருவுற்ற பெண்களுக்காக தூக்குக் கட்டில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் சுகாதார துறையின் இயக்கநர் வென் லி அம்மையார் கூறியதாவது.

"எங்கள் மாவட்டம் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் வாழும் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்காக கிராமப்புறங்களில் தூக்கு கட்டில் வசதிகளை நாங்கள் நிறுவியுள்ளோம். அவசர நிலைமை ஏற்படும் போது வட்ட மருத்துவ கிளினிக்களுக்கு அனுப்ப எங்கள் தூக்கு கட்டில் அணி பொறுப்போற்கின்றது. அங்கு கஷ்டம் ஏற்பட்டால் மாவட்ட மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல அவர்களுக்கு உதவி செய்யும்"என்றார் அவர்.

முச்சுவான் மாவட்டம் தவிர அதன் சுற்றுப்புறங்களிலுள்ள மாவட்டங்களும் இதே திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. குறிப்பாக சிறுபான்மை தேசிய இன மக்கள் குழுமி வாழும் பிரதேசங்களிலும் வறுமை மிக்க பிரதேசங்களிலும் பிரபுத்துவ பழக்கவழக்கங்களும் பின்தங்கிய மகப்பேற்று முறையும் பரவியிருந்தன. எனவே தொடர்புடைய வாரியங்கள் மகபேறு பற்றிய சீரான கல்வியை நடத்துகின்றன. எடுத்துக் காட்டாக மா பியென் மாவட்டத்தில் வாழும் யீ இன மக்களிடையில் பெண்கள் சொந்த வீட்டில் தான் பிரசவிக்க வேண்டும். மருத்துவ மனையில் பிரசவித்தால் சொந்த குழந்தை அல்ல என்ற மூட நம்பிக்கை நிலவியது. பெருவாரியான பிரச்சாரத்திற்கு பின் பெரும்பாலோர் இந்த மூட நம்பிக்கையை விட்டொழித்தார்கள். யீ ன மகளிர் தியென் சியுன் கூறுகிறார்.

"மருத்துவ மனையில் பிரசவித்தால் நல்லது. அங்கு வசதியாக உள்ளது. அதுவும் கவலையில்லாமல் இருக்கலாம்"

இப்போது சீன அரசு சுமார் ஆயிரம் மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு இதற்காக 44 கோடி யூவான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சீனாவின் பல்வேறு இடங்கள் இந்நிதியைப் பயன்படுத்தி கருவுற்ற மற்றும் பிரசவித்த ஏழைப் பெண்களுக்கு உதவி வழங்கியுள்ளது. இதனிடையில் பிரச்சாரம் செய்வதோடு மருத்துவ வசதிகளையும் மருந்துகளையும் வாங்கித் தந்துள்ளன என்று சீனச் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மௌ சியூன் ஆன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது.

"2005ம் ஆண்டு இறுதி வரை கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களின் மரண விகிதத்தைக் குறைக்கும் 23 மாநிலங்களில் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்மணிகளின் மரண விகிதம் ஒரு லட்சத்துக்கு 56.4 ஆகும். 2001ம் ஆண்டை விட 25.8 விழுக்காடு குறைந்துள்ளது"என்றார்.

இத்திட்டம் நாடெங்கும் பரவலாக்கப்படும். அத்துடன் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களின் ஆரோக்கியத்துக்கு பயன் தரும் முறையில் அன்பு காட்டும் வகையில் சீனா நாட்டின் பல்வேறு இடங்களில் நிர்வாக முறையை முழுமைப்படுத்தும் என்றும் மௌ சியூன் ஆன் தெரிவித்தார்.