ரயில், விமானம், நெடுஞ்சாலை ஆகியவற்றைக் கொண்ட ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பு முறை, திபெத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று, சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் QIANGBA PUNCOG அண்மையில் சொங் சிங் மாநகரில் நடைபெற்ற தென் மேற்கு வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கூறியுள்ளார்.
இதுவரை, திபெத்தில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம், 40 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. கடந்த ஜூலைத் திங்களில், சிங்ஹேய்-திபெத் ரயில் போக்குவரத்தும், கடந்த செப்டெம்பர் திங்களில், லின் ஜி விமான நிலையமும் திறந்துவைக்கப்பட்டன. திபெத்தின் வெளிநாட்டுத் திறப்புக்கு இவை பெருமளவில் உதவியுள்ளன.
|