• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-17 20:51:34    
உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்

cri

ஜப்பானில் நடைபெற்ற பெண்கள் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளை ரஷ்யா வென்றுள்ளது. இறுதியாட்டத்தில் பிரேசில் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் நேர்த்தியாக விளையாடி வெற்றியை தனதாக்கியது ரஷ்யா.

அரையிறுதி போட்டியில் இத்தாலியை ரஷ்யாவும், செர்பியா மற்றும் மாண்டநீக்ரோவை பிரேசிலும் வென்று இறுதிப்போட்டிக்கு தேர்வாயின. இறுதி போட்டியின் முதல் செட்டை பிரேசிலும், 2வது மற்றும் 3வது செட்களை ரஷ்யாவும், 4வது செட்டை பிரேசிலும் பெற்று தலா இரண்டு செட்கள் என்ற நிலையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 5வது செட் துவங்கியது.

இதில் 13 க்கு 11 என்ற நிலையில் பிரேசில் 2 புள்ளிகள் பெற்றால் முதன் முறையாக உலக சாம்பியன் பட்டம் பெறலாம் என்ற வெற்றி வாய்ப்பில் நின்றது. ஆனால் ரஷ்ய அணியின் விராங்கனைகள் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து 4 புள்ளிகளை பெற்று 15 க்கு 13 என்ற நிலையில் 5வது செட்டையும், ஆட்டத்தையும், உலக சாம்பியன் பட்டத்தையும், அதற்கான தங்க பதக்கத்தையும் வென்றனர்.

1990ம் ஆண்டுக்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து இந்த உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கத்தை வென்றுள்ளது ரஷ்யா. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் செர்பியா மாண்டநீக்ரோ அணி தொடர்ச்சியாக 3 செட்களை வென்று இத்தாலியை வீழ்த்தியது. ஆக 24 அணிகள் பங்கு கொண்ட இந்த பெண்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் முதல் 12 இடங்கள் பெற்ற அணிகள் பின்வருமாறு.

முதலிடம் ரஷ்யா, 2வது இடம் பிரேசில், 3வது இடம் செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, 4வது இடம் இத்தாலி, 5வது இடம் சீனா, 6வது இடம் ஜப்பான், 7வது இடம் கியூபா, 8வது இடம் நெதர்லாந்து, 9வது இடம் அமெரிக்கா, 10வது இடம் துருக்கி 11வது இடம் ஜெர்மனி, 12வது இடம் தைவான்.

சர்வதேச தடகள கூட்டமைப்பு விருதுகள்:

இவ்வாண்டின் சர்வதேச தடகள கூட்டமைப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜமைக்கா நாட்டு வீரர், உலக சாதனை ஓட்டக்காரர் அசாஃபா பாவல், அமெரிக்காவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சான்யா ரிச்சர்ட்ஸ், சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் தடையோட்டப் பந்தய வீரார் லியு சியாங், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த எத்தியோப்பிய நாட்டு வீராங்கனை மெசரத் டெஃபார் ஆகியோர் இவ்வாண்டுக்கான சர்வதேச தடகள கூட்டமைப்பு விருதுகளை பெறுகின்றனர்.

இவ்வாண்டின் தலைநிறந்த தடகள வீரர் என்ற விருது அசாஃபா பாவலுக்கு கிடைத்துள்ளது. சானியா ரிச்சர்ட்ஸ் இவ்வாண்டுக்கான தலைசிறந்த தடகள வீராங்கனை விருது பெறுகிறார்.

இவ்வாண்டின் சிறப்பு திறமையாளர் விருதை சீனாவின் லியு சியாங்கும், எத்தியோப்பியாவின் மெசரத் டெஃபாரும் பெருகின்றனர்.