கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் தனியார் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில், உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 50 விழுக்காடு, தனியார் பொருளாதாரத்தால் ஈட்டித் தந்துள்ளதாகும். கிழக்கு சீனாவின் நங்கின் நகரில் நடைபெற்ற "அரசு சாரா பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்துவது கருத்தரங்கிலிருந்து எமது செய்தியாளர் இதை தெரிவித்தார். சீனத் தனியார் பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் கூட்டத்தில் அறிமுகப்படுத்துகையில், இவ்வாண்டின் ஜூன் திங்கள் வரை, சீனாவில் தனியார் தொழிற்துறை வணிகர்களின் எண்ணிக்கை, இரண்டு கோடியே 50 லட்சத்து 50 ஆயிரமாகும். 46 லட்சத்து 40 ஆயிரம் தனியார் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் பதிவு செய்துள்ள மூலதனம் 7 லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானாகும்.
|