• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-20 18:36:39    
பன்னாட்டு தொழில் நிறுவனங்கள்-சீன தனியார் தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு

cri

அண்மையில், தென்கிழக்கு சீனாவிலுள்ள ச்செ சியாங் மாநிலத்தின் வென்சோ நகரில், சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்களும், உலகின் 500 முன்னணி பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் மயமாக்கம் மற்றும் உலகமயமாக்கத்தின் ஆழமான ஒத்துழைப்பு வாய்ப்பு என்பது, இப்பேச்சுவார்த்தையின் தலைப்பு ஆகும். நூற்றுக்குக் கூடுதலான சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகின் 500 முன்னணி பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் சுமார் 30 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இரு தரப்பின் எதிர்கால ஒத்துழைப்பைக் கூட்டாக விவாதித்தனர்.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 27 ஆண்டுகளில், சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடந்து வருகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தியின் சராசரி ஆண்டு அதிகரிப்பு, 9.6 விழுக்காடாகும். பொருளாதார அளவு தொடர்ந்து விரிவாக்குவது, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் மாபெரும் சந்தைத் தேவையை கொண்டு வந்து, சீரான வளர்ச்சி வாய்ப்பை வழங்கி வருகிறது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் தனியார் பொருளாதாரமும், சீனப்பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் இரு முக்கிய ஆற்றலாகும் என்று, சீன வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனச் சங்கத்தின் தலைவர் SHI GUANG SHENG அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

கடந்த செப்டெம்பர் வரை, சுமார் 200 நாடுகள் மற்றும் வட்டாரங்கள் சீனாவில் முதலீடு செய்துள்ளன. சீனாவில் அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை, 66000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதிவரை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தனியார் பொருளாதாரம் 50 விழுக்காடு வகித்துள்ளது என்றார் அவர்.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பின் துவக்கக்காலத்தில், சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்கள், அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாகும். நிதியும் தொழில் நுட்பமும் குறைந்திருந்தன. அப்பொழுது, சீனாவில் நுழைந்த பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், போதுமான நிதியையும் தொழில் நுட்பத்தையும் கொண்டிருந்த போதிலும், சீனச் சந்தையை அறிந்துக்கொள்ள வில்லை. இதனால், சீனப்பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி போக்கில், இரு தரப்பின் ஒத்துழைப்பு இன்றியமையாததானது. JOHNSON & JOHNSON என்னும் அமெரிக்கத் தொழில் நிறுவனத்தின் உயர் துணை ஆளுனர் டோம் கோலி பேசுகையில், ஒத்துழைப்பை வலுப்படுத்தினால், பரஸ்பரம் நலன் தர முடியும் என்பதை இரு தரப்பின் தனிச்சிறப்பு உறுதிப்படுத்தியுள்ளது என்று கருதினார். அவர் மேலும் கூறியதாவது:

இது, ஒரு நல்ல வாய்ப்பு. ஒத்துழைப்பின் மூலம், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், சீனத் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் நுட்பம் மற்றும் நிதி ஆதரவை வழங்கி, அவற்றின் நிர்வாகத் திறனை வலுப்படுத்தி, வணிகச் சூழலை மேம்படுத்துவற்கு உதவி அளிக்கலாம். அதே வேளை, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் வளர்வதற்கு, சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்கள், புதிய வாய்ப்பை வழங்கலாம். சீனப்பொருளாதார வளர்ச்சியின் போக்கிற்கு இணங்க, தனியார் தொழில் நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்ப்பைக் கொள்வோம் என்றார் அவர்.

தற்போது, 9 விழுக்காட்டுக்குக் கூடுதலான தனியார் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புறவை நிறுவியுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரு தரப்பின் ஒத்துழைப்பு, முழுமையாகவும் பல நிலைகளாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. சீனத் தனியார் பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் பௌ யூ சியுன் பேசுகையில், சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்கள், நிர்வாக வடிவத்தை மேலும் மாற்றி, எதிர்காலத்தில் ஒத்துழைப்பின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தற்போது, சீனாவின் 70 விழுக்காட்டு தனியார் தொழில் நிறுவனங்கள், குடும்பத் தொழில் நிறுவனங்களாகும். அவை நீண்டகாலத்தில் சீனாவின் பாரம்பரிய பண்பாட்டில் இருக்கின்றன. இந்த பண்பாட்டு வழக்கம், ஒத்துழைப்பு கருத்தொற்றுமைக்குத் துணைபுரியாது. தனியார் தொழில் நிறுவனங்கள், சர்வதேசத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விதிகளை அறிந்துகொண்டு, தொடர்புடைய சட்டத்தையும் பண்பாட்டு பழக்க வழகங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

வென்சோ நகரிலுள்ள தியென் ச்சாங் குழுமம், தொழில் துறையில் பயன்படுத்தப்படும் மின் இயந்திர வசதிகளை உற்பத்தி செய்யும் தனியார் தொழில் நிறுவனமாகும். கடந்த 3 ஆண்டுகளில், இக்குழுமம், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுடன், சீராக ஒத்துழைத்துள்ளது. இதில், நிர்வாக முறை, குழு கட்டுமானம் முதலிய சீனத் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நலனை தரும் கருத்துக்களை தியென் ச்சாங் கற்றுக்கொண்டுள்ளது. இக்குழுமத்தின் ஆளுனர் கௌ தியென் ரே கூறியதாவது:

முதலில், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் குழுமக் கட்டுமான வடிவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். தவிர, நிர்வாக முறை, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

எதிர்கால ஒத்துழைப்பில், சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும், தமது மேம்பாட்டைப் பயன்படுத்தி, ஒத்துழைப்புக் கூட்டாளிக்கு நலனைத் தந்து, மதிப்பை உருவாக்க வேண்டும் என்றும் கௌ தியென் ரே தெரிவித்தார்.