• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-20 22:24:56    
தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

ஏறக்குறைய 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விளையாட்டு வீரர்களும் விராங்கனைகளும் வருகின்ற டிசம்பர் 1 முதல் 15 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக கத்தார் நாட்டு டோஹாவில் அணி திரளவுள்ளனர். ஆசிய அளவிலான ஒலிம்பிக் போட்டிகளை போன்றது, ஆசிய விளையாட்டு போட்டி. 4 ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவின் பூசானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது 150 தங்கம், 84 வெள்ளி, 74 வெண்கலம் என பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற சீனா, இந்த முறையும் தனது பதக்க வேட்டைக்கான வீரார்களையும், வீராங்கனைகளையும் தயார்படுத்தியுள்ளது. 2008 ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் பதக்கங்களை குவிப்பதே சீன அணியின் தீவிர வேட்கையாக தற்போது உள்ளது என்றாலும், ஆசிய அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளையும் எளிதில் தட்டிக்கழிக்கவோ, விட்டுக்கொடுக்கவோ சீனாவுக்கு எண்ணமில்லை. கடந்த முறை பூசானில் துப்பாக்கிச் சுடுதலில் மொத்தமுள்ள 42 தங்கங்களில் 27 தங்கங்களை வென்று ட்ரீம் டீம், கனவு அணி என்று அழைக்கப்பட்ட சீன துப்பாக்கி சூட்டூ அணியில், தற்போது 22 புதுமுகங்கள். நீச்சல் போட்டிகளின் அங்கமாக நடைபெறும் நீர் குதிப்பு டைவிங்கில் கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் மற்றொரு கனவு அணியாக அழைக்கப்பட்ட சீன நீர்குதிப்பு அணி, கடந்த முறை மொத்தமுள்ள 14ல் 10 தங்கங்களை வென்றது. தற்போது சீன் ஆணியில் குவோ ஜிங்ஜிங், வூ மின்ஷியா, லி திங் ஆகிய மூன்று ஒலிம்பிக் சாம்பியன்கள் உட்பட திறமையானவர்கள் பலர் உள்ளனர்.

மற்றொரு கனவு அணியாக வர்ணிக்கப்பட்ட சீனாவின் ஜிம்னாஸ்டிக் அணி கடந்த 2004 ஒலிம்பிக்கில் சோர்ந்து போனாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டென்மார்க்கில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிகளை குவித்து சாம்பியனாக சாதனை படைத்தது, அதே அணி டோஹாவுக்கு தங்க வேட்டைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

தடகள போட்டிகளில் உலக சாதனையாளர், இவ்வாண்டு சர்வதேச தடகள கூட்டமைப்பின் சிறந்த திற்மையாளர் விருதை வென்றவர், சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் லியு சியாங் தலைமையில் அணி திரண்டு நிற்கின்றனர் சீன தடகள வீரர்களும், வீராங்கனைகளும். பூசானில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளீன் தடகள விளையாட்டு பிரிவில் மொத்தம் 14 தங்கங்களை, அதாவது தடகள விளையாட்டின் மூன்றில் ஒரு பங்கு தங்க பதக்கங்களை சீனா வென்றது. இந்த முறை எத்தனை என்பது லியு சியாங்கின் பின் அணிவகுத்து நிற்கும் 40 தடகள வீரார்கள் வீராங்கனைகளின் கையில் உள்ளது.