• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-22 12:36:44    
தமிழ் மூலம் சீனம் பாடம் 64

cri
ராஜா.....கலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் தமிழ் மூலம் சீனம் வகுப்பின் மூலம் பழைய பாடங்களை படித்து பயிற்சி செய்தோம்.

கலை.....ஆமாம். ஒன்றரை மாதத்தில் பழைய பாடங்களை மீண்டும் ஒலிபரப்பிய மூலம் நமது நண்பர்கள் கற்றுக் கொண்ட சீன சொற்களை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றோம். உங்களுக்கு நன்றாகப் புரிகிறதா?

ராஜா.....பராவாயில்லை. கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் உள்ளது. இனி எண்களை வாக்கியத்தில் பயந்படுத்துவது பற்றி தொடர்ந்து பயிற்சி செய்து கற்றுக் கொள்ளலாமே.

கலை......சரி இன்றைய வகுப்பில் படிக்க போகின்ற வாக்கியத்தில் புதிய சொற்களை முதலில் தனித் தனியாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ராஜா.....நீங்கள் சொல்லுங்கள். நான் படிக்கின்றேன். அப்புறம் நீங்கள் சீன மொழியில் விளக்கினால் நான் தமிழில் பேசுகின்றேன்.

கலை.....சரி இன்றைக்கு நாம் முக்கியமாக தொலைவு தொடர்பான சொற்களை படிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நீளம் பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்.

ராஜா......கலை தொலைவு பற்றிய சொற்களில் நீளம் என்பதை சீன மொழியில் எப்படி சொல்வது?

கலை....நீளம் என்பதற்கு சீன மொழியில் ச்சாங் என்று சொல்ல வேண்டும்.

ராஜா......ச்சாங் என்பது நீளம் என்பதற்குச் சமமாகும்.

கலை......பெருஞ்சுவர் என்பது உலகப் புகழ்பெற்ற 7 அதி சயங்களில் ஒன்றாகும். அதன் நீளம் எவ்வளவு என்பதை சீன மொழியில் இப்படிச் சொல்ல வேண்டும்.

ராஜா......கலை பெருஞ்சுவர் என்பதை சீன மொழியில் எப்படிச் சொல்வது?

கலை.....மன்னிக்கவும் நான் பெருஞ்சுவர் என்பதை சீன மொழியில் சொல்ல மறந்துவிட்டேன்.

ராஜா.....பரவாயில்லை.

கலை.....பெருஞ்சுவர் என்பதை சீன மொழியில் ச்சாங் செங் என்று சொல்வார்கள்.

ராஜா.....ச்சாங் செங், ச்சாங் செங்.

கலை.....நீங்கள் சரியாக உச்சரிக்கிறீர்கள்.

கலை......அடுத்து இப்போது பெருஞ்சுவர் எவ்வளவு நீளம் என்பதை ஒரு வாக்கியமாக சொல்லலாம்.

ராசா.......பெருஞ்சுவர் என்பதை சீன மொழியில் ச்சாங் செங் என்று சொல்ல வேண்டும்.

கலை.......எவ்வளவு நீளம் என்பதை சீன மொழியில் யு தோ ச்சாங் என்று சொல்ல வேண்டும்.

ராஜா......சரி கலை நீங்கள் தமிழில் சொலுங்கள். நான் சீன மொழியில் சொல்வேன்.

கலை....எவ்வளவு நீளம்?

ராஜா........யு தோ ச்சாங்?

கலை......எவ்வளவு நீளம்?

ராஜா.......யு தோ ச்சாங்?

கலை.....ராஜா உங்கள் உச்சரிப்பு மிக தெளிவாக இருக்கின்றது.

தொடர்ந்து கற்றுக் கொள்வோம். ச்சாங் செங் யு தோ ச்சாங்?

ராஜா......ச்சாங் செங் யு தோ ச்சாங்?

கலை......பெருஞ்சுவர் எவ்வளவு நீளம்?

ராஜா...... ..ச்சாங் செங் யு தோ ச்சாங்?

கலை......பெருஞ்சுவர் எவ்வளவு நீளம்?

ராஜா...... ..ச்சாங் செங் யு தோ ச்சாங்?

கலை......பெருஞ்சுவர் எவ்வளவு நீளம்?

ராஜா...... ..ச்சாங் செங் யு தோ ச்சாங்?

கலை......அடுத்து தொலைவு என்பதைக் குறிப்பதற்கு சீன மொழியில் சில சொற்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கிலோமீட்டர் என்பதை சீன மொழியில் கொங் லி என்று சொல்ல வேண்டும்.

ராஜா......கிலோமீட்டர் என்னும் தொலைவைக் குறிக்கும் சொல் கொங் லி என்று சீன மொழியில் உச்சரிக்க வேண்டும்.

கலை....ஆமாம். கொங் லி தவிர, மீட்டர் என்ற சொற்குக்கு மி என்று சொல்ல வேண்டும்.

ராஜா......எனக்கு புரிந்தது. கிலோமீட்டருக்கு கொங் லி, மீட்டருக்கு மி.

கலை......ராஜா நீங்கள் ஆசிரியர் கற்றுத் தரும் பாடத்தை நன்றாக புரிந்து கொண்டு கற்றுக் கொள்கிறீர்கள்.