• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-22 12:36:44    
நாளை 5

cri
ஷானின் மனைவிக்கு முதலில் தலை சுற்றியது. பிறகு சிறிது ஓய்வெடுத்ததும் சரியாகிவிட்டாள். ஆனாலும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று மட்டும் அவளுக்குத் தோன்றியது. நினைக்க நினைக்க எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. திடீரென அந்த அறை மிகவும் அமைதியாகிவிட்டதை உணர்ந்தாள்.

எழுந்து விளக்கைப் பொருத்தினாள். அறை மேலும் அமைதியானது போல் இருந்தது. மெல்லப் போய் கதவைச் சாத்திவிட்டு விட்டு கட்டிலில் உட்கார்ந்தாள். தறியோ தரையில் மொனமாக நின்று கொண்டிருந்தது. தைரியத்தை எல்லாம் திரட்டி சுற்றி முற்றிப் பார்த்த போது, அவளால் உட்காரவோ, நிற்கவோ முடியவில்லை. அறை அமைதியானது மட்டுமல்ல, அது மிகவும் பெரியதாக மாறி, இருந்த பொருட்கள் எல்லாம் காலியானது போல் தெரிந்தன. மிகப் பெரிதான அறை அவளை அறைந்து விட்டது. சுற்றிலும் இருந்த காலியான உணர்வோ அவளைத் துளைத்தெடுத்தது. மூச்சுவிட முடியாமல் திணறினாள்.

பாவோ உண்மையிலேயே செத்து விட்டான் என்பதை அவள் இப்போது புரிந்து கொண்டாள். அவன் செத்தது மட்டுமல்ல, இந்த அறையைப் பார்க்க விரும்பாமலும் போய் விட்டான். விளக்கை ஊதி அணைத்துவிட்டு படுத்தபடியே நினைவில் ஆழ்ந்தாள். தான் நூல் நூற்றபோது பாவோ பக்கத்தில் உட்கார்ந்து சோம்பு கலந்த பட்டாணி தின்று கொண்டே இருந்தது நினைவுக்கு வந்தது. தன்னுடைய சின்னஞ்சிறு கருவிழிகளால் அவளைப் பார்த்தான். திடீரென 'ம்மா...அப்பா டம்ப்ளிங்ஸ் (ஹுன்துன்) வித்தாரு இல்லியா? நானும் பெரியவனாகி அதை வித்து நிறைய நிறைய்ய... துட்டு சம்பாதிப்பேன். எல்லாத்தையும் உங்கிட்டேயே கொடுப்பேன்.'

அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் தான் நூற்கும் ஒவ்வொரு அங்குல நூலும் உயிருள்ளதாகி, விலைமதிப்பற்றதாகத் தோன்றியது. இப்போது? ஷானின் மனைவி தற்காலம் பற்றி நினைக்கவே இல்லை. அவள் ஒரு பாமரப் பெண் அவளால் என்ன வழி காண முடியும்? இந்த அறை மிகமிகப் பெரிது. மிகமிக காலியானது என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்.

அவள் பாமரப் பெண் என்றாலும் செத்தவர்கள் திரும்பவும் உயிருடன் வர மாட்டார்கள் என்பதை அறிவாள். தனது பாவோவை இனிமேல் பார்க்க முடியாது. 'பாவோ, நீ இன்னும் இங்கதான் இருக்கணும். நான் கனவுல உன்னைப் பார்ப்பேன்.' பெருமூச்சுவிட்டபடியே சொல்லிக் கொண்டாள்.

கண்களை மூடிக் கொண்டாள். உடனே தூக்கம் வந்து பாவோவைக் கனவில் காண விரும்பினாள். காலியாக வியாபித்திருந்த மௌனத்தினூடே, தனது சுவாசம் திக்கித் திணறுவதை உணர்ந்தாள்.

ஒருவழியாக ஷானின் மனைவி தூங்கத் தொடங்கினாள். அறை மேலும் அமைதியானது. சலனமற்றுப் போனது. குங்கின் பாடல் எப்போதோ ஓய்ந்து விட்டது.

'பாவப்பட்ட பெண்ணே. தன்னந்தனி ஆனாயே' என்று புலம்பியபடியே அவன் மதுக்கடையில் இருந்து போய் விட்டான்.

அவு அவன் தோள்களைப் பற்றிக் கொள்ள இருவரும் போதையில் பெரிதாக நகையாடியபடி உருண்டுபுரண்டு சென்றனர்.

ஷானின் மனைவிக்கு ஆழ்ந்த தூக்கம். குங்கும் மற்றவர்களும் போய்விட்டனர். மதுக்கடை மூடப்பட்டது. லுச்சன் அமைதியில் ஆழ்ந்தது. இரவு மட்டும், நாளையாக மாறும் ஆசையுடன் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டில் எங்கோ ஒளிந்திருந்த சில நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.