
1983ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 4ஆம் நாள் சீனாவின் ஷான்துங் மாநலத்தின் செஞ்சிலுவை சங்கம், சீனத் தனிச்சிறப்புடைய ஷான்துங் முதியோர் பல்கலைக்கழகத்தை நிறுவியது. சீனாவில் முதியோருக்கான பல்கலைக்கழகத் துறையில் வரலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளதை இது குறிக்கின்றது. சீனாவின் கல்வித் துறையின் வெற்றிடத்தை இது நிரப்பியுள்ளது. 1984ஆம் ஆண்டு மார்ச் சிங்களில், குவாங்துங் மாநிலத்தில், முதலாவது அரசு சாராத முதியோர் பல்கலைக்கழகமான குவாங்துங் லிங்ஹை முதியோர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1995ஆம் ஆண்டு, ஷாங்கை மாநகராட்சியின் முதியோர் பணிக் கமிட்டி, ஷாங்கை முதியோர் பல்கலைக்கழகம், ஷாங்கை தொலைகாட்சி பல்கலைக்கழகம் ஆகியவை, ஷாங்கை தொலைகாட்சி மூல முதியோர் பல்கலைக்கழகத்தை நிறுவின. தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து கல்வி கற்கும் 2000க்கும் அதிகமான நிலையங்கள் இந்த பல்கலைக்கழகத்துக்கு உண்டு. சீனாவில் செய்தி ஊடகம் மூலம், முதியோருக்கு கல்வி கற்கும் முதலாவது முதியோர் பல்கலைக்கழகம் இது. இவ்வாறு, முதியோர் வீட்டிலேயே தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலம் கல்வி பயிலலாம்.
2000ஆம் ஆண்டு ஷாங்கை மாநகராட்சியின் முதியோர் பணிக் கமிட்டி, ஷாங்கை முதியோர் பல்கலைக்கழகம், ஷாங்கை தொலைகாட்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கூட்டாக துவக்கி வைத்த, ஷாங்கை இணையம் மூல முதியோர் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது, இவ்வாறு சீனாவின் முதியோருக்கான கல்வி மேலும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
2000ஆம் ஆண்டு, பெய்சிங் மாநகரில் யீஹை முதியோர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சீனாவின் குடியிருப்புப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட முதலாவது அரசு சாராத முதியோர் பல்கலைக்கழகம் இதுவாகும். 2001ஆம் ஆண்டு, சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஒரு முதியோர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. குவாங்துங் சௌசிங் கட்டிடத்தில் இந்த பல்கலைக்கழகம் உள்ளதால், சௌசிங் பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தில் வாழும் முதியவர்கள் அனைவரும் தாம் விரும்பிய பாடங்களை இலவசமாக படிக்கலாம். மாணவர்களில் மிக வயது குறைந்தவருக்கு வயது 75. மிக வயது கூடுதலானவருக்கு வயது 99.
|