• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-22 09:10:47    
கடிதங்களை அனுப்பிய நேயர்களுக்கு நன்றி

cri

க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம், 30 பள்ளிப்பட்டி நேயர் ஆர். பிச்சியம்மாள் எழுதியது. சீனாவின் தலைநகர் பெய்சிங்கில் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், பெய்சிங் மாநகரம் மிகச் சரியாக திட்டமிட்டு, தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும், ஒலிம்பிக் தொடர்பான வளர்ச்சி பணிகள் குறித்த தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ர அடிப்படையில், ஒரு கனவு ஒரு உலகம் என்ற இவ்விளையாட்டுத் திருவிழா பற்றிய அனைத்து அடிப்படை தகவல்கலை உலகறியச் செய்ய 9 மொழிகளில் 24 மணி நேர ஒலிபரப்பு செய்து வருவதை அறிந்தேன். உலகின் தலை சிறந்த ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியது என்ற வரலாற்று பதிவு இடம் பெறும் நாள் விரைவில் வரும் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து சேந்தமங்கலம் தி.கார்த்திக் எழுதிய ஆகஸ்ட் 14ம் நாள் ஒலிபரப்பான சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். தமிழகத்தில் முட்டைகோஸை பலவகையில் பயன்படுத்திகிறோம், நிகழ்ச்சியில் புதுமையான முறையில் சமைப்பது பற்றி அறிமுகபடுத்தப்பட்டது. வேகவைக்காமல், உப்பு சர்க்கரை, வினிகர், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து புதிய வகையில் சீன உணவு தயாரிக்கும் முறை அறிந்தோம். முயன்று பார்த்து சுவை எப்படி என்று ஒரு வரி எழுதுவேன் என்று கூறியுள்ளார்.

க்ளீட்டஸ்: கோவை மாவட்டம் தென்பொன்முடி நேயர், தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம் அடுத்து இடம்பெறுகிறது. செப்டம்பர் முதல் நாள் இடம்பெற்ற சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சியில் சீனாவின் பன்முக வளர்ச்சி என்ற கட்டுரையின் மூலம் சைக்கிள்களுக்கு பெயர் போன சீன நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கார்கள், அவற்றின் உற்பத்தித் திறன், மக்களிடையே கார்களுக்கான வரவேற்பு போன்ற தகவல்களை அறிந்து, சீன நாடும் மற்ற நாடுகளை போல பல துறையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சிய்டைந்தேன். என்றாலும் சுற்றுப்புறச் சூஉழல் சீர்கேட்டை காக்கவும் தயார் செய்யவேண்டும். கட்டுரை வழங்கிய தமிழ் செல்வம் அவர்களுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து திருச்சி மண்ணச்சநல்லூர் நேயர் மா. முருகேசன் எழுதிய கடிதம். ஆகஸ்ட் 15ம் நாள் நிகழ்ச்சியில் செய்திகள், செய்தித் தொகுப்பு ஆகியவற்றை செவிமடுத்தோம். பயனுள்ளதாக அமைந்தன.உங்கள் குரல் நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட சோழன் சீன வானொலி நேயர் நேயர்களின் உரையாடலைக் கேட்டோம். சீன வானொலியின் மீதான் அன்பை மனதின் அடியிலிருந்து அனைத்து நேயர்களும் வெளிப்படுத்துவதை உணரமுடிந்தது. உதட்டிலிருந்து வார்த்தைகளாய் வெளிப்படும் அன்பை விட அடிமனதிலிருந்து எழும் அன்புக்கு சக்தி அதிகம். சோழன் சீன வானொலி நேயர்களின் கருத்துக்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் என்று எழுதியுள்ளார்.