• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-24 22:21:53    
ஆண்கள் வாலிபால் உலக சாம்பியன் போட்டிகள்

cri

கடந்த நவம்பர் 17ம் நாள் முதல் ஆண்களுக்கான வாலிபால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுக்கொன்டுள்ளன.

ஆசியா, அமெரிக்க, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பிரிவுகளாக செயல்படும் சர்வதேச வாலிபால் கூட்டமைப்பின் வட்டார ரீதியிலான பிரிவுகளின் படி 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களும், கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற நாடும், இப்போட்டிகள் நடைபெறும் நாடும் என 24 அணிகள் மோததின.

இந்த வகையில் ஆப்பிரிக்க வட்டாரத்திலிருந்து எகிப்து, துனிஷியா அணிகளும் ஆசிய வட்டாரத்திலிருந்து ஜப்பான், கசகஸ்தான், சீனா, ஈரான், கொரியா, ஆஸ்திரேலிய அணிகளும், வட அமெரிக்க வட்டாரத்திலிருந்து கியூபா, கனடா, அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, தென் அமெரிக்க வட்டாரத்திலிருந்து பிரேசில், அர்ஜென்டினா, வெனிசுவேலா அணிகளும், ஐரோப்பிய வட்டாரத்திலிருந்து ரஷ்யா, போலந்து, பிரான்ஸ், செக் குடியரசு, செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, கிரேக்கம், இத்தாலி, ஜெர்மனி, பல்கேரியா அணிகளும் மோதின.

இதில் முதற்கட்ட போட்டியில் தலா 6 அணிகள் கொண்ட 4 குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்குள்ளாக அணிகள் மாறி மாறி மற்ற அணியோடு மோதின. வெற்றி தோல்விக்கு புள்ளிகள் அளிக்கப்பட்டு குழுவின் மற்ற அனைத்து அணிகளோடு ஒவ்வொரு அணியும் மோதிய பின், புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெறும் என்ற அடிப்படையில் தற்போது 16 அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இரண்டாவது சுற்றில் தகுதி பெறும் 16 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிக்கான 12 அணிகள் தேர்வு செய்யப்படும். தற்போது இரண்டாவது சுற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் அணிகள் பின்வருமாறு:

1) போலந்து, ஜப்பான், அர்ஜென்டினா, போர்ட்டோ ரிக்கோ, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, கியூபா

2) பல்கேரியா, இத்தாலி, செக் குடியரசு, அமெரிக்கா, செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, ரஷ்யா, கனடா, துனீஷியா.