• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-07 16:50:20    
சீனாவின் சிங்காங் மலை

cri

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் உள் நாட்டுச் சுற்றுலாவில், பிரபல மலை மற்றும் ஆறுகளைப் பார்வையிடுவதிலும் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்வதிலும் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.

இவர்களைத் தவிர, பயணிகள் பலர் சீன வரலாற்றில் புகழ்பெற்ற புரட்சிச் சின்னங்களாக விளங்கும் இடங்களில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர். சீனாவில் இத்தகைய சுற்றுலா, செந்நிறச் சுற்றுலா என்று அழைக்கப்படுகின்றது.

செந்நிறச் சுற்றுலாவில் ஒரு காட்சித் தலமாகத் திகழும் சிங்காங் மலை, மத்திய தெற்கு சீனாவின் சியாங்சி மற்றும் ஹுனான் மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ளது.

சியாங்சி மாநிலத்தின் தலைநகரான நான்சாங்கிலிருந்து புறப்பட்டு, தென் மேற்கை நோக்கி வாகனம் மூலம் பயணத்தால் சுமார் 6,7 மணி நேரத்திற்குப் பின்னர், சிங்காங் மலை காட்சித் தலத்தைச் சென்றடையலாம்.

இந்தக் காட்சித் தலத்தின் பரப்பளவு 200 சதுர கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. காட்டுப் பரப்பின் விகிதம் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.

கடந்த நூற்றாண்டின் 20ஆம் ஆண்டுகளின் இறுதியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாபெரும் தலைவர் மா சேதுங் அவர்கள், உயர்ந்த மலைகளையும் அடர்ந்த மரங்களையும் கொண்ட இவ்விடத்தில் முதலாவது கிராமப்புறப் புரட்சித் தளத்தை நிறுவினார்.

இதன் விளைவாக, சீனப் புரட்சி, சிங்காங் மலையிலிருந்து தொடங்கி இறுதியில் நாடு முழுவதிலும் பரவி வெற்றி பெற்றது. இதனால், சிங்காங் மலை, சீனப் புரட்சியின் தொட்டில் என்று கருதப்படுகிறது.

பயணிகளைப் பொறுத்தவரை, சிங்காங் மலை ஒரு மலையாகத் திகழும் அதே வேளை, வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தைக் குறிக்கும் அடையாளம் என்றும் கூறலாம்.

கம்பீரமான ஆபத்தான மலை அமைவு, விசித்திரமான நீர் வீழ்ச்சி, மேகக் கடல், அழகான azalea மலர் ஆகியவற்றின் காரணமாக, சிங்காங் மலையின் காட்சித் தலம் சீனாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது.

அங்கு, மொத்தம் 60க்கும் அதிகமான இயற்கை காட்சி இடங்கள் உள்ளன. அவை, 500க்கு மேற்பட்ட அதிகமான உயர்வான மற்றும் தாழ்வான மலைகளால் உருவாக்கப்பட்டவை.

இவற்றில், கல் குரங்குகள் மலை, தொன்மை வாய்ந்த தேவதாரு மர மலை, மயில் மலை உள்ளிட்ட 7 மலைகள் புகழ்பெற்றவை. சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டியான செல்வி லியூசின் பயணிகளிடம் கல் குரங்குகள் மலை பற்றி அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,

கல் குரங்குகள் மலையில் நின்று கிழக்கை நோக்கிப் பார்த்தால், சிறு மலை மேடை ஒன்று தென்படும். இந்த மேடையின் மேல் விசித்தரமான கற்கள் உள்ளன. அவற்றின் வடிவம், குரங்குகள் போன்றது.

இதில் மிக உயரமானதொரு பெண் குரங்கு, இந்தச் சிறிய குரங்குகளின் தாய். அது சிறு குரங்குகளுக்குப் புத்திமதி கூறிக்கொண்டிருக்கின்றது. புத்திமதியைக் கேட்கும் குரங்குகள் என்பது இக்கல் காட்சியின் பெயர் என்றார் வழிகாட்டி.

கல் குரங்குகள் மலை போல, ஏனைய மலைகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. எடுத்துக்காட்டாக, தொன்மை வாய்ந்த தேவதாரு மர மலை சுட்டத்தக்கது. மரங்களில் மிகவும் பழமையான மரத்தின் வயது சுமார் 800.

உயரமாக வளரும் இம்மரங்கள் கம்பீரமானதாகக் காணப்படுகின்றன. மனிதப் பண்பாட்டுக் காட்சி, சிங்காங் மலைக் காட்சித் தலத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

புரட்சிச் சின்னமாகத் திகழும் 100க்கும் அதிகமான நினைவிடங்கள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. அப்போதைய செம் படை மருத்துவ மனை ஒன்றுக்குப் பக்கத்தில், ஹுனான் மாநிலத்தைச் சேர்ந்த சூசோ நகரிலிருந்து வந்த செல்வி யின்சின், அக்காலத்திலான செம்படையின் ஆடையை அணிந்துகொள்ள முயன்றார்.

அவர் கூறியதாவது, இந்த ஆடையை அணிய விரும்புகின்றேன். நீங்கள் பாருங்கள் மிகவும் நல்லது என உணர்கின்றேன் என்றார் அவர். இந்தச் செல்வி யின்சினுக்குப் பின் பக்கத்தில் சீனாவின் காலஞ்சென்ற தலைவர் மா சேதுங் உருவப் பதக்கங்களையும் புரட்சிச் சின்னமாக விளங்கும் நினைவுப் பொருட்களின் பிரதிகளையும் விற்கும் கடைகள் அதிக பயணிகளை ஈர்த்துள்ளன.