
சீன வரலாற்றில் புகழ்பெற்ற புரட்சிச் சின்னமாக விளங்கும் சிங்காங் மலை, மத்திய தெற்கு சீனாவின் சியாங்சி மற்றும் ஹுனான் மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ளது.
கம்பீரமான ஆபத்தான மலை அமைவு, விசித்திரமான நீர் வீழ்ச்சி, மேகக் கடல், அழகான azalea மலர் ஆகியவற்றின் காரணமாக, சிங்காங் மலையின் காட்சித் தலம் சீனாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது.
அங்கு, மொத்தம் 60க்கும் அதிகமான இயற்கை காட்சி இடங்கள் உள்ளன. அவை, 500க்கு மேற்பட்ட அதிகமான உயர்வான மற்றும் தாழ்வான மலைகளால் உருவாக்கப்பட்டவை. இவற்றில், கல் குரங்குகள் மலை, தொன்மை வாய்ந்த தேவதாரு மர மலை, மயில் மலை உள்ளிட்ட 7 மலைகள் புகழ்பெற்றவை.
வழிகாட்டி யின்சினுக்குப் பின் பக்கத்தில் சீனாவின் காலஞ்சென்ற தலைவர் மா சேதுங் உருவப் பதக்கங்களையும் புரட்சிச் சின்னமாக விளங்கும் நினைவுப் பொருட்களின் பிரதிகளையும் விற்கும் கடைகள் அதிக பயணிகளை ஈர்த்துள்ளன.

பொருட்களைத் தேர்ந்தெடுத்ததோடு கடை உரிமையாளருடன் பயணிகள் பேரம் பேசினர். வரலாற்றில் ஆர்வம் காட்டியுள்ள இளைஞர்கள் சிங்காங் மலையில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர்.
இது தவிர, மேலும் அதிகமான பெற்றோர்கள் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சிங்காங் மலைக்கு வருகின்றனர்.
சிங்காங் மலையில் சுற்றுலா மூலம், எழில் மிக்க இயற்கை காட்சியை நேரடியாக உணரும் அதே வேளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றையும் அறிந்துகொண்டு, தற்போதைய இன்பமான வாழ்க்கையைக் குழந்தைகள் மேலும் பேணி மதிக்க வேண்டும் என்பது பெற்றோரின் நோக்கம் ஆகும்.
பெய்ச்சிங்கிலிருந்து வருகை தரும் பயணி குவுன் கூறியதாவது, இம்முறை விழா நாட்களில் நான் என் குடும்பத்தினருடன் இங்கு வந்திருக்கிறேன். வரலாற்றுக் கல்வி அறிவைப் பெறுவதில் குழந்தைகளுக்கு இது துணை புரியும் என துவக்கத்திலே நினைத்தேன்.
ஆனால் இறுதியில், நாங்களும் போதனை பெற்றிருக்கிறோம். தலைவர் மா சேதுங் மா மனிதர் என்பதை முதலில் உணர்ந்துள்ளேன். புதிய சீனா நிறுவப்பட்டு, மக்கள், நாட்டின் உரிமையாளராக மாறுவது எளிதல்ல என்பதையும் உணர்ந்துள்ளேன் என்றார் அவர்.

சிங்காங் மலையில் கோடை காலத்தில் கடும் வெப்பமில்லை. குளிர்காலத்தில் கடும் குளிரும் இல்லை. இவ்விடத்தின் காலநிலை மக்களுக்கு உகந்தது. 4 பருவங்களிலும் சுற்றுலா மேற்கொள்வது வசதியாக உள்ளது.
இருப்பினும், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலம் சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த பருவம் ஆகும். ஏனெனில், அப்போது சிங்காங் மலையில் எங்கெங்கும் azalea மலர்கள் மலர்கின்றன. மிகவும் அழகானது.
தற்போது azalea மலர், சிங்காங் மலை நகரின் நகர மலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, உள்ளூர் அரசு, அப்போதைய செம் படையினர் உண்ட செந்நிற சோறு, பூசணிக்காய் சூப்பு ஆகியவற்றைச் சிறப்பு உணவாக மாற்றியுள்ளது.
இவ்வற்றை விரும்பினால், சாப்பிடுவது தவிர செந்நிற அரிசியையும் உலர்ந்த பூசனிக்காயையும் பயணிகள் எடுத்துச்சென்று தத்தமது உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கலாம். சிங்காங் மலைக்குச் சென்று சுற்றுலா மேற்கொள்வது வசதியாய் உள்ளது.

அதன் அருகிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிங்காங் மலைக்குச் செல்லும் சிறப்பு வாகனங்கள் உள்ளன. நான்கு பருவங்களிலும் சிங்காங் மலையில் சுற்றுலா மேற்கொள்ளலாம். பிரச்சினை ஏதும் இல்லை. சிங்காங் மலை காட்சித் தலத்தின் சுற்றுச் சூழல் சுத்தமானது.
பயணிகள் பலர் விவசாயிகளது வீடுகளில் உண்ணவும் வசிக்கவும் விரும்புகின்றனர். மூங்கில், காளான், உள்ளூர் பிரதேசத்தின் சுதேசப் பொருள், காட்டுத் தவளை முதலிய உணவுகளை விவசாயக் குடும்பங்களில் உண்ணலாம்.
பயணிகள் அதிகமாக இல்லாத நாட்களில், விவசாயி உணவு விடுதியில் ஒரு நாளுக்கு ஒரு பயணியின் செலவு, 100 ரன்மின்பி யுவானுக்குட்பட்டது. பயணிகள் அதிகமாக இருக்கும் நாட்களில், செலவு இதை விட கொஞ்சம் அதிகம். பயணிகள் ஹோட்டலில் தங்கியிருக்கலாம்.
ஆனால் நாள் ஒன்றுக்கு ஒருவரின் தங்குமிடச் செலவு மட்டும் சுமார் 100 யுவான். நேயர்களாகிய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியூட்டும் சிங்காங் மலைக்கு வருகை தாருங்கள். இந்த மலையிலுள்ள எழில் மிக்க காட்சியைப் பார்வையிடத் தக்கது.
|