சீனா உட்புகுத்தியுள்ள தொழில் நுட்ப மதிப்பு
cri
சீன வணிக அமைச்சின் புள்ளி விவரத்தின் படி, இவ்வாண்டின் முதல் பத்து திங்களில் சீனா உட்புகுத்திய தொழில் நுட்பம் பற்றிய 8692 உடன்படிக்கைகள் இவ்வாண்டின் முதல் பத்து திங்களில் பதிவாகியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 1874 கோடி அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 37.1 விழுக்காடு அதிகமாகும். இப்பத்துத் திங்களில், ஐரோப்பிய ஒன்றியம், சீனா தொழில் நுட்பத்தை உட்புகுத்தும் மிகப் பெரும் ஊற்றுமூலமாகத் திகழ்கின்றது. ஜப்பான், இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன. ரயில்வே போக்குவரத்துத் தொழில், இன்னமும், மிகப் பெரும் அளவில் தொழில் நுட்பம் உட்புகுத்தப்படும் தொழிலாகவுள்ளது என்றும் புள்ளி விவரம் காட்டுகின்றது.
|
|