அவருக்கு வேலை அதிகமாக இருக்கும் போது நான் அவருக்கு உதவி செய்கிறேன். ஆகவே லட்சியத்தையும் குடும்பப் பொறுப்பையும் நாங்கள் நன்றாக கையாள்கிறோம். நான் மிகவும் அதிர்ஷ்டசாரி. என் குடும்பம் எனக்கு மிக பெரிய உதவி வழங்குகின்றது. இதுதான் என் கடமையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார் யெயிஹான். 70 வயதான உய் கூர் இன மூதாட்டி ஞெஸ்ஹென் 2003ம் ஆண்டில் வசிப்பிடத்திற்கு குடி பெயர்ந்தார். அவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். மகன் உருமுச்சி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். மகள் பெய்சிங்கில் சம்பாதிக்கின்றார். அவருடைய வாழ்க்கை பற்றி கூறியதாவது. கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பானது. எங்கள் வாழ்க்கை சீராகியுள்ளது. தரமான வீட்டில் வாழ்கின்ற எனக்கு இன்னல்கள் இல்லை. விழா நாட்களில் ஊழியர்கள் வந்து என்னை பார்க்கின்றனர். இப்போது ஓய்வு பெற்ற எனக்கு மாசத்திற்கு 600 யுவான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இன்பமாக வாழ்கின்றேன் என்றார் மூதாட்டி ஞெச்சுஹான். அருமையான சிங்கியாங்கில் பல்வேறு தேசிய இனங்களின் பெண்களும் ஆண்களும், ஒன்று சேர்ந்து அயரா உழைப்புடன் தாயகத்தை செழுமைபடுத்துகின்றனர். சிங்கியாங் பகுதியில் எங்கெங்கும் பாடல்கள் எதிரொலிக்கின்றன.
ஆடல்கள் அழ கூட்டுகின்றன. இணக்கம் நிறைந்த சிங்கியாங் எங்கள் கண் முன்னால் காட்சி யளிக்கின்றது. நேயர்கள் இதுவரை முஸ்திம் பெண்களின் வாழ்க்கை என்னும் நான்காவது கட்டுரையைக் கேட்டீர்கள். இப்போது கேள்விகள் 1. காஷ் நகரில் மிக புகழ் பெற்ற ஹோட்டலின் பெயர் என்ன? 2. தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு நிலை தலைமை பதவிகளில் உள்ள பெண் ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இத்துடன் மேற்கு சீனாவின் முத்து என்னும் பொது அறிவு போட்டியின் நான்கு கட்டுரைகள் முழுமையாக ஒலிபரப்பி விட்டோம்.
|