
66 வயதான ஹையிட்ஸ்.ஸ்தூக் என்ற ஜெர்மனியர் ஒருவர் 44 ஆண்டுகாலத்தில் சைக்கிள் மூலம் 211 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஊடாக சென்றிருக்கிறார். அவர் கடந்த மொத்த தொலைவு 5 லட்சத்து 90 ஆயிரம் கிலோமீட்டராகும். ஜெர்மனியின் ஹொவில் ஹோவ் நகரைச் சேர்ந்த அவர் 1962ஆம் ஆண்டு ஒரு சிறப்பு சைக்கிள் மூலம், உலகச் சுற்றுலாத் திட்டத்தைத் துவங்கினார். பயணத்தின் வழியில் அவர், பல காடுகள், போர் பிரதேசங்கள், பாலைவனங்கள் ஆகியவற்றுக்கு ஊடாகக் கடந்து சென்றார். அவர் சாம்பியாவில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார்.
கேமரூனில், கைதுசெய்யப்பட்டார். மத்திய அமெரிக்கா வழியாகச் சென்ற போது, எரிமலை வெடித்தது. அப்போது காயமடையும் ஆபத்து ஏற்பட்டது. தவிரவும், அவர் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம், ஈரான், சிலி, குவாடாமாலா ஆகிய பகுதிகளில் பயணம் செய்த போது, வெவ்வேறு அளவிலான சிக்கினார். 2006ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் விடியற்காலை பிரிட்டனின் ஒரு நகரில் ஒரு கூடாரத்தில் ஹையின்ட்ஸ் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது சைக்கிளை கூடாரத்துக்கு வெளியே வைத்து கயிற்றால் கட்டினார்.
ஆனால் 4 மணிநேரத்துக்கு பின் அவர் விழித்த போது, அந்த சைக்கிள் காணாமல் போயிற்று. இதை ஹையின்ட்ஸ் காவல்துறையினரிடம் அறிவித்ததோடு, சைக்கிளை தனக்கு திருப்பி அனுப்புமாறு அவர் செய்தி ஊடகங்கள் மூலம் அந்த திருடரிடம் கேட்டுக் கொண்டார். அவருக்காக சைக்கிளை தேடும் வேளையில், ஒரு செய்தியேடு 500 பவுண்ட பணத்தை செலவழித்தது. ஒரு நாள் கழித்து,உள்ளூர் காவல்துறையினர் ஒரு பூங்காவில் அவரது சைக்கிள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
1990ஆம் ஆண்டுகளில் ஹையின்ட்ஸ் சைக்கிள் மூலம் சீனாவிற்கு வந்தார். நீண்ட தூர சைக்கிள் பயணத்தில் அவர் தமது சுற்றுலா அனுபவங்கள் பற்றிய கை யேட்டுக் குறிப்புகளையும் அஞ்சல் அட்டைகளையும் விற்பனை செய்து பணம் சம்பாதித்து, தமது சுற்றுலா செலவுக்கு நிதி திரட்டினார். நேயர்கள் இதுவரை, இத்துடன் இன்றைய மலர்ச்சோலை நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
|