கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளின் இறுதியில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை சீனாவில் நிறைவேற்றப்பட்ட பிறகு, சீனாவில் வெளிநாட்டு வர்த்தகம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது, சீனாவின் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகத் தொகை உலகில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது. ஆனால், தற்சார்ப்புச் சின்னமுடைய உற்பத்தி பொருட்கள், சீனாவின் ஏற்றுமதியில் 10 விழுக்காடு மட்டுமே வகிக்கின்றன. துவக்க நிலை உற்பத்தி பொருட்களை முக்கியமாக கொண்ட வெளிநாட்டு வர்த்தக முறை, மூலவளத்தைப் பெருமளவில் பயன்படுத்தி, மென்மேலும் அதிகமான வர்த்தகச் சர்ச்சை மற்றும் வர்த்தகத் தடையை கண்டுள்ளது. வர்த்தக அதிகரிப்பு முறையை மாற்றும் பொருட்டு, தற்சார்ப்புச் சின்னங்களின் கட்டுமானத்தை ஊக்குவிக்க, சீன அரசு பாடுபட்டு வருகிறது.
இவ்வாண்டின் நடுப்பகுதி முதல், தற்சார்ப்புச் சின்னங்களைப் பிரச்சாரம் செய்ய, சீன வணிக அமைச்சகம் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தியது. சுமார் 100 செய்தியாளர்களும் தொண்டர்களும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு, நூற்றுக்கு அதிகமான முக்கிய நகரங்களில் சீனாவின் தற்சார்ப்புச் சின்னங்களைப் பிரச்சாரம் செய்து, தற்சார்ப்புச் சின்னமுடைய உற்பத்தி பொருட்களை நுகர்வோர் மேலும் அதிகமாக வாங்குமாறு வேண்டுகோள் விடுத்து, மேலும் அதிகமான புகழ்பெற்ற சின்னமுடைய உற்பத்தி பொருட்களை தயாரிக்க, சீனத் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
புகழ்பெற்ற சின்னத்துக்கான நுகர்வோரின் உணர்வை வலுப்படுத்துவது, இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்று, சீனத் துணை வணிக அமைச்சர் லியேள சியேள ச்சி கருதினார். அவர் கூறியதாவது:
சின்னம் என்பது, ஒரு நாடு அல்லது வட்டாரத்தின் சமூகப் பொருளாதார ஒட்டுமொத்தத் திறனின் பிரதிப்பலிப்பு ஆகும். இந்த நிகழ்ச்சி, புதுப்பித்தல் ரக நாட்டு நெடுநோக்கை நிறைவேற்றி, சீனாவில் தற்சார்ப்பு சின்னத்தின் கட்டுமானத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும். தற்சார்ப்பு சின்னத்துக்கான பொது மக்களின் உணர்வை மேம்படுத்தி, தற்சார்ப்புச் சின்னத்தின் மீதான நுகர்வை விரிவாக்கி, வர்த்தக அதிகரிப்பு வழிமுறையை மாற்றுவது என்ற நோக்கத்தை அடைய முயல்கிறது என்றார் அவர்.
4 திங்களான இந்த நிகழ்ச்சி, ஐந்து நெறிகளில், முக்கிய மாநிலங்களிலும் மாநகரங்களிலும் முக்கிய ஏற்றுமதி சந்தைகளிலும் பெரிய ரக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, சின்னங்களுக்கான மதிப்பீட்டு, மேம்பாட்டு மற்றும் விளம்பர அமைப்பு முறையை நிறுவி, சந்தையில் போட்டியாற்றலையும் சீரான எதிர்கால வளர்ச்சியையும் கொண்ட தற்சார்ப்பு சின்னங்களை ஊக்குவிக்கும் ஊக்க அமைப்பு முறையை உருவாக்கி, கொள்கை மற்றும் நிதி துறையில், வணிக அமைச்சகம் ஆதரவு அளிக்கும்.
சீன வணிக அமைச்சகத்தின் சந்தைக் கட்டுமான பிரிவின் துணைத் தலைவர் CAO DE RONG பேசுகையில், தற்சார்ப்புச் சின்னங்களை வளர்ப்பது, தற்போது சீன வர்த்தக அதிகரிப்பின் திசையாகியுள்ளதை இந்நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
சீனப்பொருளாதார வளர்ச்சி தற்போது, புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. வர்த்தகத்தின் வேகமான அதிகரிப்புடன், சர்வதேச வர்த்தகச் சர்ச்சை படிப்படியாக தீவிரமாகியுள்ளது. இதனால், சீனப்பொருளாதாம் மற்றும் வர்த்தகத்தின் அதிகரிப்பு வழிமுறை மாற்றப்பட வேண்டும் என்றார் அவர்.
|