• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-27 16:46:57    
தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளின் சீன அணி

cri

2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் மீதான கவனம் அதிகமாக இருந்தாலும் எதிர்வரும் டிசம்பர் முதல் நாள் தொடங்கும் 2006ம் ஆண்டு தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முதலிடம் பெறும் தனது ஆற்றலை மீண்டும் என்பிக்க ஒப்பீட்டளவில் இளம் வீரர்களையும், வீராங்கனைகளையும் சீன அனுப்பவுள்ளது. தொடர்ந்து 7 முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிக்க சீன முயற்சிக்கும் என்று இந்த சீன விளையாட்டு பிரதிநிதிக்குழுவினைச் சேர்ந்த துஆன் ஷிஜியே கூறுகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவின் பூசானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 150 தங்கம், 84 வெள்ளி, 74 வெண்கலம் மொத்தத்தில் 308 பதக்கங்களை வென்று முதலிடம் பெற்ற சீனா, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982ம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்கம் தொடர்ச்சியா கடந்த 6 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிரது. ஆனால் சில பல காரணங்களால சீன அணியில் சில நட்சத்திரங்கள் இம்முரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய சாம்பியன் சிங் ஹுயினா, ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கம் வென்ற லுவோ சுவேஜுவான் மற்றும் பூப்பந்தில் தங்கம் வென்ற ஷங் ஜுன் ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டிக்கான சீன அணியில் இடம்பெறவில்லை.

இருப்பினும் மொத்தமுள்ள 39 விளையாட்டுகளில் 37ல் பங்கேற்க 647 வீரர்களையும் வீராஅங்கனைகளும் சீனா அனுப்புகிறது. இவர்களில் 167 பேர் ஏற்கனவே சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆனால் எஞ்சியுள்ள 63 விழுக்காட்டினருக்கு ஆசிய விளையாட்டு போட்டிகளே அவர்கள் முதன் முறையாக பங்கேற்கும் சர்வதேச அளவிலான போட்டியாக அமையும். புது முகங்களைக் கொண்ட அணியாக இருந்தாலும் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம் பெறுவது நிச்சயம் என்ற நிலை இருக்க தென்கொரியாவும் ஜப்பானும் இரண்டாவது இடத்தை பெற கடும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.